விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது! வைரல் வீடியோ

நேரலை வீடியோவில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : May 9, 2019, 04:35 PM IST
விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது! வைரல் வீடியோ  title=

நேரலை வீடியோவில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவை சேர்ந்த உணவு தொடர்பான இணையதளத்தை நடத்தி வரும் பெண் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு அதன் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேரலை வீடியோ ஒன்றில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட உள்ளதாக கூறியிருந்தார்.

அவர் அதனை சாப்பிட முயன்ற போது அவரின் முகத்தில் அந்த ஆக்டோபஸ் கடிக்க தொடங்குகிறது. ஆக்டோபசை முகத்திலிருந்து போராடி நீக்கிய அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த விடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Trending News