அன்னையின் மடியில் சுகம் தேடும் கங்காரு! தாயின் மடியில் பத்து மாசம் பத்தாது வீடியோ

Kangaroo Video Viral: தாயின் வயிற்று பைக்குள் செல்ல போராடும் கங்காரு குட்டியின் வீடியோ மீண்டும் வைரலாகிறது... நாம் அனுபவிக்காத விஷயங்களை வீடியோவாக பார்ப்பது சுவராசியமாக இருக்கிறதால் இது வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2023, 03:59 PM IST
  • தாயின் மடியின் வாச்ம் பத்து மாசம் பத்தாது
  • ஆச்சரியம் ஏற்படுத்தும் வைரல் வீடியோ
  • கங்காருவும் குட்டியும் போராட்ட வீடியோ வைரல்
அன்னையின் மடியில் சுகம் தேடும் கங்காரு! தாயின் மடியில் பத்து மாசம் பத்தாது வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் தனி உலகமாக இயங்கி வந்தாலும், பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நாம் அனுபவிக்காத விஷயங்களை வீடியோவாக பார்ப்பது சுவராசியமானது

அதிலும் மிருகங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என பிற உயிரினங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு என தனி மவுசு உண்டு. மிருகங்களின் வேட்டை வீடியோ அனைவரையும் இணையத்தை நோக்கி ஈர்க்கிறது என்றால், அழகிய விலங்குகளின் வீடியோக்கள் மனதை மயக்கி ஈர்க்கின்றன.

தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. தாயின் மடியில் தஞ்சமடையும் வீடியோ நெகிழ வைக்கிறது.

தாயின் வயிற்று பைக்குள் செல்ல போராடும் கங்காரு குட்டியின் மீண்டும் வைரலாகிறது. அன்னையின் பாசத்திற்கு கங்காருவை உதாரணமாக சொல்லலாம். கங்காருவின் முலை அதன் மடியில் இருக்கும் பையிலே இருப்பதால், கங்காருக் குட்டிகள் பால் அருந்த வேண்டுமானால், தாயின் மடியில் அடைக்கலமாக வேண்டும். அதனால் தான் கங்காரு தாய், தனது குட்டியை எப்போதும் மடியில் வைத்துக் கொள்கின்றன.

மேலும் படிக்க | வீழ்வேன் என்று நினைத்தாயோ..பாம்பின் பதற வைக்கும் வைரல் வீடியோ

பாலூட்டிகளில், வயிற்றில் பை உள்ள இனம் கங்காரு என்பது குறிப்பிடத்தகக்து. பின்னங்கால்களால் தத்தித் தத்திச் செல்லும் கங்காருவுக்கு ஐந்தாவது கால் உண்டு என்றும் சொல்வார்கள்.

கங்காருவின் ஐந்தாவது கால் என்று சொல்வது அதன் வால் தான். நடக்கும்போது சமநிலை பேணுவதற்குத் தனது வாலை ஐந்தாவது காலாக பயன்படுத்தும் வித்தியாசமான விலங்கு இது. @fasc1nate என்ற டிவிட்டரில் மீண்டும் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ சக்கைப் போடு போட்டு வருகிறது.

மேலும் படிக்க | இரட்டைத் தலை பாம்பைப் பார்த்தால் என்னவாகும்? வீடியோ வைரலாகும்

கங்காருவை ஹை ஜம்ப் சாம்பியன் என்று சொல்லலாம். ஒரே தாவலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காரு தன் மடியில் குட்டியைக் தாங்கிக் கொண்டு குதிக்கும் கங்காருகள் அதிசயமானவை.  

வீடியோவானது ட்விட்டரில் நேச்சர் லைஃப் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அதில் தாய் கங்காரு ஒன்றும் அதனருகே குட்டி கங்காரு ஒன்றும் இருப்பதை காணலாம். குட்டி கங்காரு பால் குடிக்க முயல்வதும், அது ஒவ்வொரு முறை தோல்வியடைவதும், பிறகு மீண்டும் முயற்சியை தொடர்வதும ஆச்சரியமாக இருக்கிறது. தாயின் மடியில் தஞ்சம் தேடும் குட்டியின் வீடியோ சில மாதங்களுக்கு முன்னரே சமூக ஊடகங்களில் வைரலானது. 

தற்போது அந்த வீடியோ, வேறொரு டிவிட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டு, மீண்டும் வைரலாகிறது.

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News