சொர்க்கம் பூமியில் வநதுவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல்

Nature Wonder Water: உலகில் நிறமில்லாதது நீர் என்ற எண்ணத்தை பொய்க்கச் செய்யும் நதி இது.... பார்த்தாலே மனதை மயக்கும் வண்ண நதி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2023, 06:35 PM IST
  • பார்த்தாலே மனதை மயக்கும் வண்ண நதி
  • நீரின் நிறம் என்ன? சொல்ல முடியுமா?
  • நிறம் மாறும் நதி நீர்! இது இயற்கையின் அற்புத நதி
சொர்க்கம் பூமியில் வநதுவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல் title=

Colorful Nature: நீருக்கு நிறமில்லை, அது சேரும் இடத்திற்கு ஏற்றாற்போல தனது உருவத்தை, இருப்பை நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது என்பது அதன் சிறப்பு. ஆனால், இது பொதுவான எண்ணம் மட்டுமே என்பது தெரியுமா? நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே என்ற பழமொழி உண்டு. ஆனால், அனைத்திற்கும் மூலத்தைத் தேடுவதே அறிவியலின் அடிப்படை. இருந்தாலும், இயற்கை நம்மை பல விதங்களில் ஆச்சரியப்படுத்துகின்றது. அந்த ஆச்சரியங்களே, அறிவியலின் அடிப்படையாக இருக்கிறது.

நம்மை அதிசயப்படவைக்கும் எந்த வாய்ப்பையும் இயற்கை விட்டு வைப்பதில்லை. சில நேரங்களில் மழையுடன் வானத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. நம்மை கவிஞர்களாக்கிவிடும் இயற்கையில் நீர் மட்டும் விலக்கா என்ன?

மேலும் படிக்க | அன்னையின் மடியில் சுகம் தேடும் கங்காரு! தாயின் மடியில் பத்து மாசம் பத்தாது வீடியோ வைரல்

வளைந்து நெளிந்து ஓடும் நதியின் அழகு ஒரு நாட்டியத்தைப் போல நம்மை ஈர்க்கிறது. நதியே அழகுகளின் பொக்கிஷமாய் மாறி ஓடினால், வண்ண நதியாய் ஓடினால் எப்படி இருக்கும்? இந்த நாட்டியமாடும் அழகு நதியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.

5 வண்ணங்களுடன் ஓடும் நதியைப் பார்த்ததுண்டா? பார்த்து ரசித்து, பிறகு அதனை ஆராயுங்கள்.

வண்ணமயமான ஆறு

நீருக்கு நிறம் கிடையாது, சூரியனின் கதிர்கள் தண்ணீரின் மீது விழும்போது, அதற்கேற்றாற்போல நிறம் மாறுவது நதியின் இயல்பு. கொலம்பியாவில் ஓடும் இந்த நதி, வித்தியாசமான ஐந்து வண்ணங்களைக் கொண்டதாக இருக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாகவும், மிகவும் அழகாகவும் இருக்கிறது. .

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

சொர்க்கமே பூமியில் வந்து இறங்கியதைப் போல உள்ள இந்த நதி, இயற்கையின் அளப்பரிய அழகுக்கு எடுத்துக்காட்டு. 

வானில் இருக்கும் வானவில் நதியில் இறங்கியதோ அல்லது ஒரு ஓவியர் தனது தூரிகையால் அழகான வண்ணங்களை நதியில் நிரப்பியுள்ளாரோ என இந்த நதி நம்மை வியக்க வைக்கிறது. 

நீரின்றி அமையாது உலகு என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், நீரின் அழகு பார்க்கப் பார்க்க பிரமிக்க வைக்கிறது. இந்த நதியை நேரில் சென்று பார்க்க ஆவலாக இருந்தாலும், அதற்கு அதிக செலவு பிடிக்கும். இப்போதைக்கு இந்த வீடியோவை இன்னும் பல முறை பார்த்து, இயற்கையின் அழகை ரசித்து வியக்கலாம்.

மேலும் படிக்க | வீழ்வேன் என்று நினைத்தாயோ..பாம்பின் பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News