Viral Video: அடித்து உதைத்தவரை பழிக்குப் பழி வாங்கிய கழுதை

தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு ஏற்ப அடித்து உதைத்தவரை கழுதை ஒன்று பழிக்குப் பழி வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2022, 07:49 PM IST
  • பழிக்கு பழி வாங்கிய கழுதை
  • அடித்தவரை கடுமையாக கடிக்கிறது
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
Viral Video: அடித்து உதைத்தவரை பழிக்குப் பழி வாங்கிய கழுதை title=

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அது மனிதராக இருந்தாலும் சரி.. பிராணியாக இருந்தாலும் சரி. தங்களால் பொறுக்க முடிகின்ற அளவுக்கே ஒருவர் பொறுமையை கையாளுவார். அதன்பின் கொதித்தெழுந்துவிடுவார்கள். இதனை வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடமும் நீங்கள் பார்க்கலாம். அவ்வப்போது விளையாடுவதற்காக வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளை வம்பிழுப்பவர்கள் உண்டு. அப்போது, தன்னால் இயன்ற வரை பொறுமையாக இருக்கும் அந்த பிராணிகள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பொங்கியெழுந்துவிடும்.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

நாம் வளர்க்கும் பிராணியாக இருந்தாலும், அவற்றின் கோர முகத்தை அப்போது பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால், அது கொஞ்சம் கோரமாக இருக்கும். நாய் அல்லது பூனை, ஆடு மாடு என எதுவானாலும் சரி, சீண்டிப் பார்த்தால் உங்களுக்கான பின்விளைவுகள் மோசமாக இருக்கும். கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. அந்த எச்சரிக்கை இல்லாமல் ஒருவர் செய்த செயல், அவரையே பெரும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது. வீடியோ ஒன்றில் கழுதை ஒன்றை, ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.

அவர் தாக்கும் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு பதறும் கழுதை, எப்படியாவது தப்பித்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறது. அந்த நபர் அடிக்கும் அடிகளையெல்லாம் வெகுவாக பொறுத்துக் கொள்கிறது. சில நிமிடங்களில் காட்டுமிராண்டித் தனமாக அடித்த அந்த நபர், அடிப்பதை நிறுத்திவிட்டு கழுதை மீது ஏற முற்படுகிறார். அப்போது, இதுவே சரியான நேரம் எனக் கருதிய கழுதை, அடித்தவரின் காலை நன்றாக பிடித்து கடிக்கத் தொடங்குகிறது. அவர் கதுறுவதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் தன் வினை தன்னைச்சுடும் என்பதற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மேக்-அப் கலைத்த மணமகள், மயங்கி விழுந்த மணமகன்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News