’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

முதலையிடம் சென்று வாத்து வம்பிழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் தலைக்கு தில்ல பார்த்தியா என கிண்டலடித்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 1, 2023, 03:18 PM IST
  • முதலையிடம் வம்பிழுக்கும் வாத்து
  • சீறி கடிக்க பாய்ந்த முதலை
  • ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்து ஓடும் வீடியோ
’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ title=

புலியை வேட்டையாடுவதில் கில்லாடி முதலை. அந்த முதலையிடம் சென்று ஒரு வாத்து வம்பிழுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆனால், அதனையும் செய்திருக்கிறது ஒரு வாத்து. அந்த வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கிறது. ஒரு பண்ணையில் முதலை மற்றும் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு இருக்கும் ஒரு வாத்து முதலை வசிக்கும் பகுதிக்குள் தெரியாமல் சென்று விடுகிறது. அங்கு முதலைகள் நீருக்கு வெளியே வெயில் காய்ந்து கொண்டிருக்கும் நிலையில், வாத்தும் அந்த பக்கமாக செல்கிறது. முதலைகளுக்கு வாத்து வருவது தெரியவில்லை. ஏனென்றால் வெயிலின் இதமான சூட்டில் அவை மூழ்கியிருந்தன. 

மேலும் படிக்க | ஓநாய்களிடம் சிக்கிய சிங்கத்தை கூட்டமாக வந்து காப்பாற்றிய சிங்கங்கள் - மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

அந்த நேரத்தில் வாத்து முதலை மீது ஏறிச் செல்கிறது. முதலாவதாக படுத்திருந்த முதலை எந்த சமிக்கையும் காட்டவில்லை. 2வதாக படுத்திருந்த முதலை வாத்தின் சீண்டலுக்கு உடனடியாக ரியாக்ஷன் கொடுத்தது. சீறிப் பாய்ந்து வாத்தை கடிக்க வருவதுபோல் வந்தவுடன், விட்டால்போதுமென ஓடிச் சென்றுவிட்டது வாத்து. பயந்து கிட்டு ஓடி வந்தாலும், முகத்தில் அந்த பயத்தை கொஞம் கூட காட்டவில்லை. நானே ஆபத்துக்காரன்.... டா எனக்கு ஆபத்து கொடுக்க நினைக்கிறீங்களா? என முதலையை நோக்கி வாத்து மைண்ட் வாய்ஸில் கேட்பதுபோல் இருந்தது.

பிரச்சனையை உருவாக்குற வரை தான் நாங்க இருப்போம், பிரச்சனை வந்துட்டா சிட்டா பறந்துடுவோம் என முதலைகள் சீற ஆரம்பித்ததும் ஓடி வருகிறது வாத்து. டிவிட்டரில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது இந்த வீடியோ. கமெண்ட் அடித்திருக்கும் நெட்டிசன்கள், வாத்துக்கு தில்ல பார்த்தியா... எப்பேர்பட்ட இடத்தில் கொஞ்சம் கூட பயமில்லாமல் போகிறது என நக்கலாக கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | அனகோண்டாவுடன் நேருக்கு நேர் வந்த நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News