வாட்ச்மேன் டூ IIM பேராசிரியர்: வைரலாகும் இவரின் சாதனை!

Success Story: இந்த வீடுதான் ஒரு ஐஐஎம் உதவி பேராசிரியரை உருவாக்கியது என்று சாதனையாளர் ரஞ்சித் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2021, 10:50 AM IST
வாட்ச்மேன் டூ IIM பேராசிரியர்: வைரலாகும் இவரின் சாதனை! title=

புது டெல்லி: ஒரு நபர் நேர்மையாக வேலை செய்தால் எதுவும் சாதிக்கலாம். அந்தவகையில் வறுமையிலும், ஏழ்மையிலும் போராடி தனது கனவை எட்டிப்பிடித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த 28வயது இளைஞரான ரஞ்சித். இவரது விடா முயற்சி வெற்றியில் முடிந்தது. ஆம்., காசர்கோட்டில் உள்ள மலைகிராமத்தில் இருந்து ராஞ்சியில் உள்ள ஐஐஎம்-மில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியாக பணியில் சேரவுள்ளார் ரஞ்சித்.

இவரது அப்பா தையல்காரர், அம்மா தினக்கூலி ஆவார். ரஞ்சித் ராமச்சந்திரன் தற்போது பெங்களூரில் உள்ள CREST பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ளார். சனிக்கிழமை, அவர் கேரளாவில் (Kerala) உள்ள அவரது வீட்டின் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்., இதுதான் நான் பிறந்த வீடு. இங்கிருந்து தான் வளர்ந்தேன். நான் ரொம்ப சந்தோஷமா சொல்வேன் இந்த வீடுதான் ஒரு ஐஐஎம் உதவி பேராசிரியரை உருவாக்கியது. இந்த சின்ன வீட்டுல இருந்து ஐஐஎம் ராஞ்சிக்கான எனது பயணத்தை உங்களுக்கு கூறப்போகிறேன். 

 

ഈ വീട്ടിലാണ് ഞാൻ ജനിച്ചത്, ഇവിടെ ആണ് വളർന്നത്, ഇപ്പോൾ ഇവിടെ ആണ് ജീവിക്കുന്നത്...... ഒരുപ്പാട് സന്തോഷത്തോടെ പറയട്ടെ ഈ...

Posted by Ranjith R Panathur on Friday, 9 April 2021

 

ஒரு நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பை முடித்தேன். ஆனால் அப்போது சூழ்நிலைகள் எனக்கு சாதகமாக இல்லாததால் நான் படிப்பை நிறுத்திவிடலாம் என எண்ணினேன். அப்போது பனத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நைட் வாட்ச்மேன் வேலை கிடைத்தது. அதை வைத்து எனது படிப்பை மீண்டும் தொடர்ந்தேன். 

ALSO READ  நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் சென்னையின் 3 வயது சிறுவன்!

செயிண்ட் பியஸ் கல்லூரி மேடைகளில் எப்படி பேச வேண்டும் என எனக்கு கற்பித்தது. காசர்கோடு தாண்டியும் இந்த உலகம் இருக்கிறது என்பதை செண்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா எனக்கு கற்றுத்தந்தது. அப்படித்தான் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) அடைந்தேன். முதன்முறையாக ஒரு கூட்டத்தில் நான் மட்டும் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன். மலையாளத்தில் மட்டுமே பேசி வளர்ந்தவன் இங்கு மற்றவர்களிடம் பேசவே அச்சப்பட்டேன். என்னுடைய ஆய்வு படிப்பை கைவிட்டு விடலாம் என்று கூட நினைத்தேன். என்னுடைய வழிக்காட்டி டாக்டர். சுரேஷ் நான் எடுத்த முடிவு தவறு என்பதை எனக்கு உணர்த்தினார். அப்போதிலிருந்து நான் வெல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

குடிசையில் இருந்து ஐஐஎம் (IIM) ராஞ்சிக்கான என்னுடைய பயணம் அவ்வளவு சுலபமானது இல்லை. இதுபோன்ற ஆயிரம் குடிசைகளில் இருந்து பல கனவுகள் நிறைவேறுதற்கு முன்பாகவே மடிந்துள்ளது. இந்தக்குடிசைகளில் இருந்து பல வெற்றிகரமான கதைகள் வரவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News