திருமணத்திற்கு முன் ஒரு த்ரில்: பைக் ஓட்டி மாஸ் காட்டிய மணப்பெண்.. வைரல் வீடியோ

Viral Video: கனமான ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு அசத்தலாய் பைக் ஓட்டும் அழகை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 9, 2024, 01:33 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @__itz_tuba44 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு 15 மில்லியன் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு முன் ஒரு த்ரில்: பைக் ஓட்டி மாஸ் காட்டிய மணப்பெண்.. வைரல் வீடியோ title=

Viral Video: இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண்கிறோம். நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. 

இரு நபர்கள் மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாக திருமணங்கள் பார்க்கப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருக்கின்றது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சமீப காலங்களில் மணமேடையில் மணமக்களின் எண்ட்ரிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மிகவும் வித்தியாசமான வகைகளில் தங்கள் எண்ட்ரி இருக்க வேண்டும் என மணமக்கள் ஆசைப்படுகிறார்கள். 

அப்படி ஒரு அசத்தலான எண்ட்ரி கொடுத்த மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில், ஒரு மணப்பெண் லாவகமாக, முழு நம்பிக்கையுடன் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை ஓட்டுவதை கான முடிகின்றது. அவர் மணமகள் அலங்காரத்தில் மிக அழகாக பைக்கை ஓட்டிக்கொண்டு வருகிறார். அவர் தனது திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு செல்வதாக தெரிகிறது. ஆனால்  இது உறுதி செய்யப்படவில்லை.

மணப்பெண் என்றாலே அச்சம், மடம், நாணம் என்ற பழையகால இலக்கணங்களை மீறி, நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் அவர் அச்சமின்றி பைக் ஓட்டுவதை காண நன்றாக இருக்கின்றது. அவர் நேர்த்தியாக பைக் ஓட்டும் அழகை அந்த சலையில் செல்லும் பிற வாகனங்களில் உள்ள அனைவரும் வியந்து பார்க்கிறார்கள். கனமான ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு அசத்தலாய் பைக் ஓட்டும் அழகை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாஸாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | மலைப்பாம்பை உயிருடன் கடித்துக் கொன்ற சின்னஞ்சிறு எறும்புகள்.... அதிர வைக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @__itz_tuba44 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.  இதற்கு 15 மில்லியன் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

"இது மிக அழகான வீடியோ. திருமண நாளில் ஜாலியாக இருக்க முடியாது என்று யார் சொன்னது” என ஒரு பயனர் எழுதியுள்ளார். “எந்த ஆடை அணிந்திருந்தாலும், நெஞ்சில் உறுதி இருந்தால், தைரியம் தானாக வந்துவிடும்.” என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். “உங்கள் ஹெல்மெட் எங்கே? இது உண்மையில் பாதுகாப்பானதா? அந்த ஆடை பைக் சவாரிக்கு மிகவும் கனமாகத் தெரிகிறது.” என ஒருவர் தன் அக்கறையை காட்டியுள்ளார். 

(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)

மேலும் படிக்க | ஆட்டின் முதுகு மேல் ராஜா போல கெத்தாக சவாரி செய்யும் நாய்..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News