போனஸ் வாங்கிக்கோ என்று சொல்லி email அனுப்பிய GoDaddy பிறகு மன்னிப்பு கோரியது ஏன்?

கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணியில் இருந்து நீக்கப்படுவதும், வேலை இழப்பும் சகஜமாக இருக்கிறது. இந்த   சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு போனஸ் மின்னஞ்சல் கிடைத்தால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துவிட முடியாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2020, 11:52 PM IST
  • கிறிஸ்துமஸ் போனஸ் மின்னஞ்சல் ஊழியர்களுக்கு வந்தது
  • 500 பேர் அந்த மின்னஞ்சலை படித்து மகிழ்ந்தனர்
  • சிலர் நிறுவனம் கேட்டிருந்த தகவல்களையும் அனுப்பிவிட்டார்கள்
போனஸ் வாங்கிக்கோ என்று சொல்லி email அனுப்பிய GoDaddy பிறகு மன்னிப்பு கோரியது ஏன்? title=

கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணியில் இருந்து நீக்கப்படுவதும், வேலை இழப்பும் சகஜமாக இருக்கிறது. இந்த   சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு போனஸ் மின்னஞ்சல் கிடைத்தால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துவிட முடியாது.

மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடும் சமயத்தில், மன்னிக்கவும் என்று மற்றுமொரு செய்தி மின்னஞ்சலில் (Email) வந்தால், அது எப்படியிருக்கும்? இந்த இரண்டு அனுபவத்தையும் முன்னணி டொமைன் வழங்குநரான GoDaddy நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் செய்தியை கொண்டு வந்த மின்னஞ்சலே, விரக்தியையும் ஏற்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது தான்.

Also Read | IOC: 400 ரூபாய்க்கு டீசல் போட்டு SUV கார் வெல்ல வாய்ப்பு...

GoDaddy தனது ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் (Christmas) போனஸ் கொடுப்பதாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. பொருளாதார நெருக்கடியின் போது போனஸ் கிடைப்பதை நினைத்து மகிழ்ந்த ஊழியர்கள். பிறகு அந்த மின்னஞ்சல் கணினி பாதுகாப்பு சோதனை என்பதை அறிந்து தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டனர்.

GoDaddy நிறுவனம் தனது இரண்டாவது மின்னஞ்சலில் இவ்வாறு கூறியது: "GoDaddy தனது தளத்தின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இந்த மின்னஞ்சல் சில ஊழியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

GoDaddy அனுப்பிய கிறிஸ்துமஸ் போனஸ் மின்னஞ்சல்களில், 650 டாலர்கள் போனஸாக (Bonus) வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சலை கிட்டத்தட்ட 500 ஊழியர்கள் படித்துவிட்டனர். அந்த மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பையும் அவர்கள் கிளிக் செய்தனர். இந்த மின்னஞ்சலில், ஊழியர்கள், தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

Also Read | மரடோனாவுக்கு ஆறடி கேக் சிலை அமைத்த தமிழக பேக்கரி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News