இந்தியாவின் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பெரும் குரல் கொடுத்தவர் மஹாஸ்வேதா தேவி. 1926-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பிறந்த இவர், வங்கதேசத்தை சேர்ந்தவர். இவரது தாய் தந்தை இருவமே எழுத்தாளர்கள். எனவே சிறுவயது முதலே இவரும் எழுதுவதில் ஆர்வமுள்ளவராக வளர்ந்தார்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவற்றுக்காக இவருக்கு பத்ம வீபுஷண் விருது, பத்ம ஸ்ரீசார்க் இலக்கிய விருது, சாகத்திய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது 92-வது பிறந்தநாளை கொண்டாடியது கூகுள் டூடுல்.