வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம்.
மாப்பிள்ளைக்கும் மணமகளின் தங்கையான மைத்துனிக்கும் இடையிலான உறவு பல வித கிண்டல், கலாட்டா, கேலி ஆகியவற்றால் நிறைந்துள்ளது. மாப்பிள்ளைக்கும் மைத்துனிக்கும் இடையில் பல வித வேடிக்கையான சம்பவங்கள் நடப்பதுண்டு. பல சமயங்களில் இருவருக்கும் இடையில் பல அதிகப்படியான குறும்புகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
வீடியோவில் ஒரு திருமண வரவேற்பு நடப்பதை காண முடிகின்றது. அதில் அலங்கரிக்கபட்ட ஒரு சோபவில் மணமகனும் மணமகளும் அமர்ந்திருப்பதை காண்கிறோம். அப்போது மணமகளின் தங்கை மணமகனின் அருகில் வருகிறார். அவரை பார்த்ததும் மாப்பிள்ளை மிக குஷியாகி விடுகிறார். தனது பக்கத்தில் அமரச் சொல்கிறார். மணமகளின் தங்கையும் அருகில் அமர்கிறார். அதன் பிறகு அனைவருக்கும் முன்னிலையில் மாப்பிள்ளையும் மைத்துனியும் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுக்கிறார்கள். இதைப் பார்த்து மணமகளும் அங்கிருந்த மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மணமேடையில் மச்சினிச்சி செய்த செயலை இங்கே காணலாம்:
Aadmi ko hamesha “Mool/Asal” se zyaada “Byaaj” achcha lagta hai pic.twitter.com/jrbliGDvtf
— HasnaZarooriHa (@HasnaZaruriHai) November 22, 2023
வீடியோ வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் HasnaZarooriHai என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான லைக்குகளும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அதே சமயம் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். ‘என்னய்யா நடக்குது இங்க’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இப்படி செய்ய இவர்களுக்கு எப்படி மனது வந்தது’ என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். பலர் மணப்பெண்ணின் மனநிலையை பற்றியும் பேசி அவருக்காக பரிதாபப்பட்டுள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | மனதை கொள்ளை கொள்ளும் பறவைகளின் க்யூட் சிரிப்பு! இப்படியொரு வீடியோவை பார்த்ததுண்டா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ