உணவிற்காக வேட்டையாடும் விலங்குகள், உயிர் பிழைக்க மோதும் விலங்குகள் என உலகில் விலங்குகளைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் பறவைகளைப் பற்றிய சிந்தனைகள் அனைவருக்கும் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். உண்மையில், வாழ்க்கையில் மனிதர்களுக்கு இந்த உலகில் வாழ இருக்கும் அளவு உரிமை, பிற உயிரினங்களுக்கும் இருக்கிறது.
ஆனால், பிரச்சனைகளை சந்தித்தாலும், அதற்கு மத்தியில் நாம் வாழ்கிறோம். நமது வாழ்க்கையைப் போலவே விலங்குகள் பறவைகள் என பிற உயிரினங்களும் பிரச்சனைகளுக்கு மத்தியிலே வாழ்கின்றன. சொல்லப்போனால் இருத்தல் ஒன்றே வாழ்க்கையின் இயல்பு என்று சொல்லலாம்.
எத்தனை பிரச்சனை இருந்தாலும், நாம் அவ்வப்போது சிரிக்கிறோம். ஆனால் விலங்குகளும், பறவைகளும் பிற உயிரினங்களும் சிரிக்குமா? புன்னகைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் அவ்வப்போது எழுகிறது. ஒருவரை திட்டும் போது விலங்குகளின் பெயரைச் சொல்லித் திட்டுவது போல, முகத்தில் புன்னகை இல்லாவிட்டால் பாவம் அதற்கு இஞ்சியையும் குரங்கையும், பூனையையும் திட்டுகிறோம்.
மேலும் படிக்க | டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல்
ஆனால் உண்மையில், விலங்குகள் சிரிக்குமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? விலங்குகளும் பிற உயிரினங்களும் மனிதர்களைப் போல புன்னகைக்கின்றனவா? என்ற கேள்வியை விஞ்ஞான ரீதியாக பார்த்தால் விலங்குகளாலோ பிற உயிரினங்களாலோ புன்னகைக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். சில விலங்குகள் மனிதர்களைப் போல சிரிக்கும் சத்தத்தை உருவாக்குகின்றன. ஆனால் அவற்றை சிரிப்பு அல்லது புன்னகை என்று கூற முடியாது.
'விலங்குகளால் புன்னகைக்க முடியுமா? இல்லையா?' என்று பல அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன .
காடுகளிலும், கடலிலும், பனியிலும் வாழும் உயிரினங்கள் சிரிக்குமா என்ற கேள்வி நமக்கு வந்தது போல வேறு சிலருக்கும் வந்துள்ளது. அதன் விளைவு தான் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. பில்லியன் டாலர் கேள்வியான பறவைகள் சிரிக்குமா என்ற வினாவிற்கான விடையை தரும் வைரல் வீடியோவை பார்க்கலாம்.
வைரல் வீடியோ: பறவைகள் சிரிக்குமா?
இணையத்தில் வைரல் ஆன வீடியோ
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டு, பலரின் மனதையும் கொள்ளை கொண்டது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'பறவைகளையே சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி...’ என பலரும் பாராட்டுகின்றனர்.
உண்மையில் இந்த வீடியோவைப் பார்த்தால் நம்மை அறியாமலேயே முகத்தில் புன்னகை பூப்பதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல, பறவைகளும் சிரிக்கும் என்பதற்காக ஆதாரமும் கிடைத்துவிட்டது.
கைக்குள் அடங்கிவிடும் மொபைலுக்குள் உலகம் சுருங்கிவிட்டது. இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களும், புகைப்படங்களும் பல தகவல்களுடன் எப்போதும் நாம் பார்த்து ரசிக்க காத்துக் கொண்டிருக்கின்றன. நமக்கு அனைத்தையும் பார்த்து ரசிக்க நேரம் இல்லை என்பது தான் பிரச்சனை. கேளிக்கைக்கான வழியாக மாறிவிட்ட இணைய தளங்களில் தேவையான செய்திகள் மட்டுமல்ல, பொழுதை போக்கும் வீடியோக்களால் நமது பொழுதை கபாளீகரம் செய்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ