எந்த ஒரு பெண்ணையும் கௌதம் கம்பீர் தவறாக பேச மாட்டார்: ஹர்பஜன் சிங்!

கௌதம் கம்பீர் எந்த ஒரு பெண்ணையும் தவறாக பேச மாட்டார் என ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்! 

Updated: May 10, 2019, 01:27 PM IST
எந்த ஒரு பெண்ணையும் கௌதம் கம்பீர் தவறாக பேச மாட்டார்: ஹர்பஜன் சிங்!

கௌதம் கம்பீர் எந்த ஒரு பெண்ணையும் தவறாக பேச மாட்டார் என ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்! 

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. 

இதை தொடர்ந்து, மக்களவை தேர்தலில் டெல்லி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கௌதம் கம்பீர். ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் காம்பீர், தன்னை கீழ்த்தரமாக விமர்சித்து லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார் எனவும், கடுமையான வார்த்தையால் தன்னை விமர்சித்துள்ளார் எனவும் குறிப்பிட்டார். குறிப்பாக அதில் ஆதிஷி மாட்டு இறைச்சி உண்பவள், பாலியல் தொழிலாளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த குற்றசாட்டுக்கு கௌதம் கம்பீருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கௌதம் கம்பீர் எந்த ஒரு பெண்ணையும் தவறாக பேச மாட்டார் என ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கவுதம் கம்பிர் சம்பந்தப்பட்ட நேற்றைய நிகழ்வுகள் குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன், அவருக்கு நன்றாகத் தெரியும், எந்த பெண்ணுக்கும் அவர் ஒருபோதும் தவறாக பேசமுடியாது, அவர் வெற்றிபெறுமா அல்லது இழந்துவிட்டாரா என்பது இன்னொரு விடயம், ஆனால் இந்த விடயம் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறது "என்று ஹர்பஜன் தனது ட்வீட் கூறுகிறார்.

கடந்த மாதம் அரசியலில் நுழைந்த கம்பீர், பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) டிக்கெட்டில் கிழக்கு டெல்லியில் இருந்து லோக் சபா தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.