‘நான் தான் விராட் கோலி’ என கூறும் டேவிட் வார்னர் மகள்...

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர். ஆனால் அவரது மகள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகை என்பது உங்களுக்கு தெரியுமா?

Last Updated : Nov 10, 2019, 01:31 PM IST
‘நான் தான் விராட் கோலி’ என கூறும் டேவிட் வார்னர் மகள்... title=

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர். ஆனால் அவரது மகள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகை என்பது உங்களுக்கு தெரியுமா?

முன்னதாக, 2018-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பந்து சேத முறைகேடு காரணமாக அவர் ஓராண்டு தடையில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து தற்போது கடும் எழுச்சியில் திகழ்ந்துவருகிறார். அதேப்போல் இந்திய கேப்டன் விராட் கோலி உலகில் ஒரு சிறந்த வீரராக மாறியுள்ளார், மூன்று வடிவங்களிலும் அவரது சிறந்த ஆட்டத்தை நிரூபித்துள்ளார். இருவருக்குமான ரசிகர்கள் உலகளவில் சரிநிகராக உள்ளனர் என குறிப்பிட்டால் அது மிகையல்ல.

குறிப்பாக, டேவிட் வார்னருக்கு இந்தியாவில் விராட் கோலியின் ரசிகர் அளவிற்கு இணையான ரசிகர் பட்டாளம் உள்ளது. காரணம் இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக வார்னர் இருப்பதால். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு வீரர் (4706), அதிக அரைசதம் (44) மற்றும் IPL-ல் ஒரு கேப்டனாக (126) அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனைகளை பெற்றுள்ளார்.

IPL-ல் மிகவும் சீரான பாதையை கொண்டிருக்காத கோலி சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பல சாதனைகளைப் படைத்துள்ளார், இதன் காரணாம அவர் சர்வதேச அவளிவில் ரசிகர்களை பெற்றதோடு, டேவிட் வார்னரின் மகள் ஐவி மே-வினையும் ரசிகையாக பெற்றுள்ளார்.

டேவிட் வார்னரின் மனைவி கேண்டீஸ் வார்னர் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை நாம் தெளிவாக அறியலாம். இந்த வீடியோவில் ஐவி மே பேட்டிங் செய்து முடித்து நான் தான் விராட் கோலி என குறிப்பிடுகின்றார். இதன் மூலம் ஐவி மே, விராட் கோலியின் தீவிர ரசிகை என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள முடிகிறது.

இந்த வீடியோவுடன், கேண்டீஸ் வார்னர் தங்களது இந்திய விஜயத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News