வீடியோ: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Last Updated : May 18, 2019, 12:36 PM IST
வீடியோ: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி title=

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது இங்கிலாந்தில் வரும் 30-ஆம் தேதி துவங்குகிறது. இத்தொடரில் 11 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

இந்த போட்டியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து 10 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இத்தொடரில் இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்த்து தன் முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அத்தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டு உள்ளது. ஸ்டான்ட் பை என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் லாரின் பாடி உள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளனர்.

Trending News