Viral Video: இது என்னடா வீரனுக்கு வந்த சோதனை... நாகப்பாம்பை கண்டு பதுங்கிய புலி குட்டி...

வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும்  இடம் வன வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டும் குறிப்பது அல்ல. அது மன வலிமையையும் கூட.  இதனை நிரூபிக்கும் வகையில், புலிக் குட்டி ஒன்று,  பாம்பை கண்டு பதுங்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2024, 04:13 PM IST
  • புலிகள் தங்கள் இரையை மிகவும் துல்லியமாக பதுங்கி தாக்கும் திறன் பெற்றவை.
  • புலி குழப்பம் அடைந்து பின் வாங்குவது ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
  • தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புலி வீடியோ.
Viral Video: இது என்னடா வீரனுக்கு வந்த சோதனை... நாகப்பாம்பை கண்டு பதுங்கிய புலி குட்டி...

வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்களில், சில வீடியோக்கள், சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன,  சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. 

Add Zee News as a Preferred Source

வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும்  இடம் வன வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டும் குறிப்பது அல்ல. அது மன வலிமையையும் கூட.  இதனை நிரூபிக்கும் வகையில், புலிக் குட்டி ஒன்று,  பாம்பை கண்டு பதுங்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்தால் வன வாழ்க்கையின் உண்மை நிலையை உணராலாம். காட்டில் உயிர்வாழ்வதற்கு எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் சமயோஜித புத்தி ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது.

தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் புலி குட்டி ஒன்று மெல்ல மெல்ல நடந்து வருவதைக் காணலாம்.  அதே வேளையில்,  சாலையில், பெரிய நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது . முதலில் புலிக் குட்டி அதனை நோக்கி செல்கிறது. ஆனால், நாகப்பாம்பு, தனது தலையை உயர்த்தி பார்த்தது, என்ன நினைத்ததோ, எதற்கு வம்பு என பின்வாங்கி செல்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என கூறூவார்கள். இது புலிக் குட்டி தானே பாவம் என்ன செய்யும்.

வைரலாகும் புலிக் குட்டி வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க |  கதவை தட்டி கிலிகாட்டிய பாம்பு: வீடியோ எடுத்தவனை சும்மா விடுமா? வைரல் வீடியோ

நாம் பாம்பு புலிக்கு இரையாகி விடும் என எண்ணிய நிலையில்,  புலி குழப்பம் அடைந்து பின் வாங்குவது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. புலிகள் தங்கள் இரையை மிகவும் துல்லியமாக பதுங்கி தாக்கும் திறன் பெற்றவை. இரையை தாக்குவதற்கான சரியான தருணம் எழும் வரை பொறுமையாக தன்னை சுற்றி நடப்பதை அவதானிக்கும் திறன் பெற்றவை. அவற்றின் வலுவான தசைகள், கூர்மையான நகங்கள் மூலம்  திறமையாக வேட்டையாடுபவை.  அப்படிப்பட்ட புலியே, வேட்டையாட தயங்கும்  வீடியோ இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | விநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News