IPL 2021 RCB vs MI: ரசிகர்களுக்கு விராட் சொல்லும் Strong சேதி என்ன தெரியுமா?

விராட் கோஹ்லி ஐபிஎல் 2021 தொடக்க ஆட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செய்தி ஒன்றை வைத்திருக்கிறார். இதுதொடர்பாக செவ்வாயன்று ட்விட்டர் செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்ட கோஹ்லி, கிராக்கிங்' போட்டி காத்திருக்கிறது என்றும், 'களம் சூடாக உள்ளது' என்றும் கூறினார்.

Last Updated : Apr 6, 2021, 11:47 PM IST
  • இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குகின்றன
  • தொடக்கப் போட்டியில் ஆர்.சி.பி அணி, மும்பை அணியை எதிர்கொள்ளும்
  • மும்பை இண்டியன்ஸ் அணி ஐ.பி.எல் நடப்பு சாம்பியன்
IPL 2021 RCB vs MI: ரசிகர்களுக்கு விராட் சொல்லும் Strong சேதி என்ன தெரியுமா? title=

விராட் கோஹ்லி ஐபிஎல் 2021 தொடக்க ஆட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செய்தி ஒன்றை வைத்திருக்கிறார். இதுதொடர்பாக செவ்வாயன்று ட்விட்டர் செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்ட கோஹ்லி, கிராக்கிங்' போட்டி காத்திருக்கிறது என்றும், 'களம் சூடாக உள்ளது' என்றும் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி அதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இந்த சீசனின் தொடக்க ஆட்டம் தொடர்பாக அவர் தனது ரசிகர்களுக்கு செய்தி தெரிவித்திருக்கிறார்.

“ஆர்சிபி ரசிகர்களே! நாங்கள் திரும்பி வந்துள்ளோம், red & gold brigade உடன் பெருமையுடன் வந்துள்ளோம். #VIVOIPL இன் தொடக்க மோதலில் MI ஐ எதிர்கொள்ளும்போது அதிரடியான போட்டி காத்திருக்கிறது. #KohliMantra ஐப் பயன்படுத்தி #PlayBold க்கு உங்கள் மந்திரத்தை சொல்லுங்கள். உங்கள் காலண்டர்களில் அந்த நன்னாளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - ஏப்ரல் 9, இரவு 7:30 மணி. களம் சூடாக காத்துக் கொண்டு இருக்கிறது! ”

Also Read | நைட் மட்டும் தான் கொரோனா பாயுமா... பகலில் பதுங்கிடுமா. இரவு ஊரடங்கை கலாய்த்த ஹர்பஜன் சிங்

கோஹ்லி தனது அணியுடன் இணைந்து, அணி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வெற்றியை குவிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துளது. தற்போதைய நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்கள் எதிர் கொள்ளவிருக்கின்றனர். 

ஆனால் விளையாட்டுக் களத்தில் எதுவும் எப்படியும் மாறக்கூடியது. ஆனால் தொடக்க ஆட்டம் மிகவும் முக்கியமானது. நல்ல பிள்ளையார் சுழியைப் போட விராட்  கோலி  காத்துக் கொண்டிருக்கின்றனர். 

வல்லமைமிக்க மும்பை இந்தியன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்த பணி எளிதானது அல்ல. இரண்டு முறை ஐ.பி.எல் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்டிரிக் வெற்றியை விட்டுக் கொடுத்துவிட விரும்ப மாட்டார்கள் என்பதால் விராட்டின் முன் உள்ள சவால் பெரியதாகவே இருக்கிறது.

Also Read | பழைய மற்றும் அழித்த WhatsApp செய்திகளை மீண்டும் கொண்டுவர Tips and Tricks

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News