ஜுனாகத் வனப்பகுதியில் சிங்கத்தை தொந்தரவு செய்யும் இளைஞர்கள்: வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் சிங்கத்தை தொந்தரவு செய்யும் சில இளைஞர்கள்.

Updated: May 16, 2019, 02:53 PM IST
ஜுனாகத் வனப்பகுதியில் சிங்கத்தை தொந்தரவு செய்யும் இளைஞர்கள்: வீடியோ

ஜுனாகத்: குஜராத்தின் ஜுனகத் பகுதியில் சிங்கத்தை தொந்தரவு செய்த சிலர் இளைஞர்களின் வீடியோவை பார்க்கும் போது மிகுந்த அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானத்தை அடுத்து, குஜராத் வனத்துறையின் தலைமை வனப்பாதுகாப்பாளரான துஷ்யந்த் வாசுவாடா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் இறந்த விலங்கின் உடலை கட்டிக்கொண்டு வண்டியை ஓட்டி செல்கிறார். அந்த இறந்த விலங்கின் உடலை பார்த்து சிங்கம் பின்னால் ஓட வர வேண்டும் என்ற கட்டாயத்தில், அதை தொந்தரவு செய்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் சிங்கத்தை தொந்தரவு செய்ய காட்சியை வீடியோவாக பதிவு செய்கிறார்கள். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுக்குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வீடியோ இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு தான் எடுக்கப்பட்டது. இறந்த விலங்கின் உடலை இழுத்துச்சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து விவரம் கிடைத்துள்ளது. விரைவில் அவர்களை கைது செய்யுவோம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.