பாம்புடன் படுத்து தூங்கும் சிறுமி! எழுந்தவுடன் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ

Black Snake Viral Video: ஒரு குட்டி பெண், பாம்புக்கு அருகில் தூங்கி எழுந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 9, 2023, 04:15 PM IST
  • பாம்பை கண்டால் படையும் நடுங்கும்.
  • ஒரு சிறுமி அந்த பாம்புடன் படுத்து உறங்கியுள்ளார்.
  • இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாம்புடன் படுத்து தூங்கும் சிறுமி! எழுந்தவுடன் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ title=

தற்போது அனைவர் கைகளிலும் இருக்கும் சிறிய கை பேசி தற்போது சுருக்கி விட்டது. இதில் பல விஷயங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதனால் பலர் பயனடைகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் மனதை பாதிக்கும் அல்லது மனதை நெருடும் வகையில் பல வீடியோக்களையோ அல்லது போட்டோக்களையோ பார்க்க நேரிடும். அதில் ஒரு சில வீடியோக்கள், பலரை இரவில் தூங்க விடாமல் கூட செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

மர்மம் மற்றும் கொடிய விஷங்களுக்கு பெயர் பெற்றவை பாம்புகள். யாருக்குமே, இந்த கொடிய விளங்குகளை பார்த்தால் பயம் வரத்தான் செய்யும். காடுகளில், யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் வாழும் இந்த விலங்குகளை பலர் சும்மா போகும் பலர் சீண்டி வெறுப்பேற்றுவதுண்டு. ஒரு அளவிற்கு மேல் பாம்புகளுக்கு கோபம் வந்துவிட்டால் என்ன நடக்கும் என நமக்கே தெரியும். பாம்புகளை துன்புருத்தி வீடியோ எடுத்து அதன் மூலம் லைக்ஸ் வாங்குபவர்கள் ஒரு புறமிருக்க அவற்றுடன் நட்புடன் பழகி அவற்றை வீட்டிலேயே பிள்ளை போல் வளர்த்து வீடியோ எடுப்பவர்கள் சிலரும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: சண்டையிட்டுக் கொண்ட சிங்கங்கள்... சைக்கிள் கேப்பில் தப்பிய எருமை!

வைரல் வீடியோ:

இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு பெண், பெரிய பாம்புடன் பெட்டில் படுத்துக்கொண்டிருக்கிறார். உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் அவர், தன்னிடம் இருந்து நழுவும் பாம்பினை மீண்டும் எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார். பின்பு அந்த பாம்பும் பம்மிக்கொண்டு மீண்டும் அவரிடம் செல்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ariana (@snakemasterexotics)

இந்த வீடியோ, இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த பாம்பை பெண்ணுடன் படுக்கையில் பார்த்த நெட்டிசன்கள், இது மிகவும் முட்டாள்தனமான செயல் என கூறி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பான விவாதத்தைத் தூண்டியுள்ளது, நெட்டிசன்கள் தங்கள் கருத்துப் பிரிவில் தங்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்த வருகிறார்கள். பயனர்கள் தங்கள் உள்ளுறுப்புப் பதில்களைத் தெரிவிக்க gifகள் மற்றும் மீம்களைப் பயன்படுத்துவதால், எதிர்வினைகள் சுத்த பயங்கரம் முதல் ஆச்சரியம் வரை இருக்கும்.

ஒருவர் இந்த வீடியோவை முட்டாள்தனமானது என சொல்ல, இன்னொருவர் “ஐய்யோ என்னால் இதை பார்க்க கூட முடியவில்லை..அந்தளவிற்கு பயமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். பாம்புடன் விளையாடி வீடியோ வெளியிடுவதெல்லாம் ஒரு வேலையா என்றும் சில நெட்டிசன்கள் பேசியிருக்கின்றனர். 

மேலும் படிக்க | மிரட்டிய மிக்ஜாம் புயலில் மின்னிய மீட்புக்குழு: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News