ஜார்ஜியாவைச் சேர்ந்த மைக் ஜாக்சன் மற்றும் அவரது மகள் ஹார்பர் இணையத்தில் ஜொலிக்கும் பிரபலமாக இருக்கின்றனர். தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்கும் அவர்களது வீடியோ இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மையில், அவரது மகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் எடுத்த வீடியோ, பலருக்கும் பிடித்தமான வீடியோவாக மாறியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரசித்த ஆயிரக்கணக்கானோர், அந்த வீடியோவை இப்போது பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மைக் ஜாக்சன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உன் மீது நம்பிக்கை கொள் என்று கேப்சனிட்டு அவர் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில், மகள் ஹார்பர் ஒரு டிரஸ்ஸிங் டேபிள் மீது நின்று கொண்டிருக்கிறார். அங்கிருந்து குதிக்கும்படி கேட்கும் மைக் ஜாக்சனின் வார்த்தைகளை செய்ய மகள் ஹார்பர் தயங்குகிறார். குதிக்க சொல்லும்போதெல்லாம் தயங்கியபடி தட்டிக் கழிக்கும் மகள் ஹார்பருக்கு அவர் நம்பிக்கையூட்டுகிறார். உன்னால் முடியும் என்பதை அழகாக சொல்லிக் கொடுகிறார். அவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டபிறகு எட்டிக் குதிக்கும் குழந்தையை லாவகமாக பிடித்துக் கொள்கிறார் மைக் ஜாக்சன்.
இந்த வீடியோ 6 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த கிளிப் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு வாழ்கைப் பாடம் என்று அமெரிக்க நகைச்சுவை நடிகர், நடிகர் மற்றும் எழுத்தாளர் ரோட்னி பெர்ரி இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ளார். இதேபோல் பல யூசர்களும் தங்களின் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஏம்மா உடற்பயிற்சி பண்ண வேற இடமே இல்லையா? பறக்கும் விமானத்தில் தொங்கிய பெண்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ