கவுண்டமணி பாணியில் எட்டி உதைத்த குரங்கு! வைரலாகும் வீடியோ!

சாப்பிட்டு கொண்டிருந்த தாய் குரங்கின் உணவை வாங்க முயன்ற மற்றொரு குரங்கிற்கு தாய் குரங்கு ஓங்கி உதைவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 8, 2022, 11:05 AM IST
  • சாப்பாட்டை எடுக்க வரும் குரங்கு.
  • தள்ளிவிடும் மற்றொரு குரங்கு.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கவுண்டமணி பாணியில் எட்டி உதைத்த குரங்கு! வைரலாகும் வீடியோ! title=

விலங்குகளின் பல செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது, அதிலும் குறிப்பாக வீட்டு விலங்குகளை விட காட்டு விலங்குகளின் செயல்கள் விரைவில் கவனத்தை ஈர்த்து விடுகிறது.  குரங்கிலிருந்து தோன்றியது தான் மனிதன் என்கிற பழமொழியை உணர்த்தும் விதமாக தற்போது ஒரு குரங்கின் செயல் அமைந்து இருக்கிறது.  மனிதர்கள் செய்யும் செயல்களை போலவே குரங்குகளும் செய்கின்றன, ஆனால் அவை குரங்குகள் செய்யும்பொழுது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது.  

மேலும் படிக்க | ஜடேஜாவைப் போல் துதிக்கையில் வாள் வீசும் குட்டியானை - Viral Video

குரங்கினங்களுக்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால் குரங்கிற்கு இரண்டு மூளை உள்ளதாம், ஒரு மூளையானது உடலையும் மற்றொரு மூளையானது அதன் வாலையும் செய்லபட வைக்கிறதாம். உணவு என்றாலே பலருக்கும் பிரியம், நமக்கு பிடித்த உணவை யாரேனும் பறிக்க நினைத்தால் நமக்கு எவ்வளவு கோவம் வரும், அதேபோல தான் குரங்கிற்கும் . குரங்கின் உணவை பறிக்க நினைத்த மற்றொரு குரங்கிற்கு உதைவிட்ட காட்சி தான் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை டாக்டர்.சம்ரத் கவுடா ஐஎப்எஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  

 

அந்த வீடியோவில் ஒரு தாய் குரங்கு தனது மடியில் ஒரு குட்டி குரங்கை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு உணவை கையில் வைத்து ருசித்து கொண்டு இருக்கின்றது.  அதன் அருகில் மற்றொரு குரங்கும் அமர்ந்துகொண்டு உணவை ருசித்து தின்றுகொண்டு இருக்கின்றது.  அருகில் இருந்த அந்த மற்றொரு குரங்கின் உணவு முடிந்து போனதும் , அந்த குரங்கு தாய் குரங்கின் கையில் இருந்த உணவை பறிக்க முயல்கிறது.  இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய் குரங்கு, தனது உணவை பறிக்க நினைத்த மற்றொரு குரங்கிற்கு ஓங்கி ஒரு உதைவிட, அந்த குரங்கு சுருண்டு விழுகிறது.  மார்ச்-7ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இணையத்தில் இதுவரை நாற்பதாயிரம்  பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவிற்கு பலரும் சிரிக்கும் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | யானையையே பயந்து ஓட செய்த பெண்! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News