லாரிக்குள் அடங்கும் திருமண மண்டபம்! பிரமிப்பு ஏற்படுத்தும் மொபைல் ஹால்

Moving Marriage Hall: கைக்குள் அடங்கும் மொபைல் போன்களை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், திருமண மண்டபத்தை எதற்குள்ளாவது அடக்க முடியுமா? முடியும் என்று சொல்கிறது நவீன தொழில்நுட்ப முன்னேற்றம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 2, 2022, 11:38 AM IST
  • மொபைல் போன் தெரியும்! ஆனா அதென்னா மொபைல் மண்டபம்?
  • டெஸ்டினேஷன் வெட்டிங்குக்கு ஏற்ற நவீன மண்டபம்
  • கல்யாணத்தை வித்தியாசமா பண்ணலாமா?
லாரிக்குள் அடங்கும் திருமண மண்டபம்! பிரமிப்பு ஏற்படுத்தும் மொபைல் ஹால் title=

புதுடெல்லி: கைக்குள் அடங்கும் மொபைல் போன்களை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், திருமண மண்டபத்தை எதற்குள்ளாவது அடக்க முடியுமா? முடியும் என்று சொல்கிறது நவீன தொழில்நுட்ப முன்னேற்றம். ஒரு லாரிக்குள் திருமண மண்டபம் அடங்கிவிடுகிறது. ஒரு லாரிக்குள் எப்படி பெரிய இடத்தை அடைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா? இந்த கேள்வி தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கும் எழுந்ததும், அதைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள திருமண மண்டப வீடியோவை 4 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்த்ததால் அது இந்த வார வைரல் வீடியோக்கள் பட்டியலில் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகிறது. 

அவ்வப்போது வேடிக்கையான மற்றும் ஊக்கமளிக்கும் ட்வீட்களை பதிவிடும் ஆனந்த் மஹிந்திராவின் இந்த வீடியோ வித்தியாசமானதாக இருக்கிறது. சக்கரங்களில் ஒரு திருமண மண்டபம் என்ற கருத்தும்,படைப்பும் "சிந்தனைக்குரியது" என்றும் தொழிலதிபர் மஹிந்திரா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் வெறும் பாராட்டுகளுடன் நிற்கவில்லை. இந்த யோசனையின் பின்னணியில் உள்ள மூளைகளை சந்திக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை? 

நகரும் திருமண டிரக்கின் வீடியோ வெளியிட்ட மஹிந்திரா, "இந்த தயாரிப்பின் கருத்து மற்றும் வடிவமைப்பின் பின்னணியில் உள்ள நபரை நான் சந்திக்க விரும்புகிறேன். மிகவும் ஆக்கப்பூர்வமானது. மற்றும் சிந்தனைமிக்கது. தொலைதூர பகுதிகளுக்கு வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. ஏனெனில் அது மக்கள் தொகை அடர்த்தியான நாட்டில் நிரந்தரமாக இடத்தைப் பிடிக்காது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருமண மண்டபம் இருக்கும் லாரியில், 40x30 சதுர அடியில் ஒரு மண்டபம் அடங்கியுள்ளது என்பது ஆச்சரியமானது. திருமண மேடை, திருமண மண்டபத்திற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் சுமார் 200 விருந்தினர்கள் கலந்துக் கொள்ளும் வரவேற்பு ஹாலும் உள்ளது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

லாரி ஒன்று திருமண மண்டபமாக விரிவதும், அதில் ஒரு திருமணம் நடைபெறுவதும் மிகவுக்வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்காக, கையடக்க திருமண மண்டபத்திற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் வீடியோவில் காட்டியது.

கிளிப் பதிவிட்ட சில நொடிகளில் ட்விட்டரில் உடனடி ஹிட் ஆனது. "கையடக்க உள்கட்டமைப்பு!!! மொபைல் கிளினிக்குகள் மற்றும் கழிப்பறைகளுக்குப் பிறகு, மொபைல் திருமண மண்டபங்கள் மூலம், மக்களுக்கான வசதிகளை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும் அற்புதமான யோசனை. இது போன்ற தொழில்நுட்பம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சாத்தியமற்ற அல்லது பொருளாதார ரீதியாக லாபகரமான பகுதிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும்" ஒரு பயனர் கூறினார்.

 

மற்றொருவர், "கல்யாணங்களின் தன்மை மாறுவதுபோலவே, திருமண மண்டபங்களின் தன்மையும், இணக்கத்தன்மையும் மாறுகின்றன... கீப் இட் அப்...." என்று தெரிவித்துள்ளார்.

வசதிகள் அதிகம் இல்லாத இடங்களில் இந்த திருமண மண்டபம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில், இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News