ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவை பசுமை நிறைந்த ஒரு வீட்டை போன்று மாற்றியுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரல்!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மும்பையில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் தனது தனித்துவமான முயற்சியால் இணையத்திலிருந்து ஒரு பெரிய வரவேற்ப்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். தனது ஆட்டோவை பசுமை நிறைந்த ஒரு வீட்டை போன்று மாற்றியுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைராளாகி வருகிறது.
சத்யவன் கைட் தனது ஆட்டோவில் பெரும்பாலான அடிப்படை வசதிகளை பொருத்தியுள்ளார். இதனால் அவரது பயணிகள் வசதியான பயணத்தை அனுபவிக்க முடியும். வாஷ்பேசின், ஹேண்ட்வாஷ், மொபைல் போன் சார்ஜிங் புள்ளிகள், தாவரங்கள் மற்றும் டெஸ்க்டாப் மானிட்டர் - இந்த வசதிகள் அனைத்தையும் சத்யவன் கீட்டின் ஆட்டோ ரிக்ஷாவில் காணலாம் என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. இதை உங்களால் நம்பமுடியாது ஆனால் உண்மை. சத்யவன் கைட் ஒரு கிலோமீட்டர் வரை சவாரி செய்வதற்கு மூத்த குடிமக்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
இது குறித்து ANI-இடம் கூறுகையில்; "நீங்கள் உங்கள் தொலைபேசியை எனது ஆட்டோவில் சார்ஜ் செய்யலாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளது, ஒரு வாஷ்பேசின் உள்ளது. மூத்த குடிமக்களுக்கும் ஒரு கிலோமீட்டர் வரை சவாரி செய்ய நான் கட்டணம் வசூலிக்கவில்லை. காரணம் நான் இதைச் செய்தேன், பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க நான் விரும்பினேன்.
Mumbai: Satyawan Gite, an auto-rickshaw driver has equipped his auto with facilities ranging from wash basin, mobile phone charging points, plants to desktop monitor, in order to provide comfortable rides to passengers. (20.11) pic.twitter.com/gLjZTSG7Yo
— ANI (@ANI) November 20, 2019
சத்யவன் கீடே-ன் ஆட்டோ ரிக்ஷாவால் இணையம் மகிழ்ச்சியடைகிறது, அதற்காக அவரைப் பாராட்டியது. "மும்பைவாலாக்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்" என்று ஒரு பயனர் கூறினார், மற்றவர்கள் அவரது "நல்ல வேலை" என்று அவரைப் பாராட்டினர்.