சரத்குமார், விக்ரம் பிரபு நடிப்பில் வானம் கொட்டட்டும் trailer!

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

Updated: Jan 23, 2020, 07:35 PM IST
சரத்குமார், விக்ரம் பிரபு நடிப்பில் வானம் கொட்டட்டும் trailer!
Screengrab

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு, டீஸர் வெளியான நிலையில், தற்போது படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணு தங்கோம் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த பாடல் ஆனது இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்ட பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.