நண்பனின் திருமணத்தில் இவர் செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

Funny Wedding Video: மாப்பிள்ளைத் தோழன் மாபெரும் திருடனாக மாறினார். தோழன் திருடனான இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2022, 01:07 PM IST
  • திருடனாக மாறிய தோழன்.
  • வீடியோ வைரல் ஆனது.
  • அதிர்ச்சியில் இணையவாசிகள்.
நண்பனின் திருமணத்தில் இவர் செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

உலகம் முழுவதும் திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. திருடர்கள் ஒவ்வொரு முறையும் திருடுவதற்கு பல புதிய வழிகளை கையாள்கின்றனர். திருட்டு தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகின்றன. 

சில சமயங்களில் திருடர்கள் பிக் பாக்கெட் மூலம் பணத்தை எடுத்துச்செல்கிறார்கள். சில நேரம் நம் அருகிலேயே நின்றுகொண்டு விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச்செல்கிறார்கள். 

தற்போது மீண்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் மணமகனின் நண்பரே திருமணத்தில் மணமகனிடம் திருடுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி 

திருமணத்தில் திருடனாக மாறிய தோழன் 

இந்த அதிர்ச்சி வீடியோவில் ஒரு திருமணம் நடப்பதை காண முடிகின்றது. மணமகனுக்கு அருகில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமர்ந்துள்ளனர். மணமகனின் நண்பர் ஒருவர் அவருக்கு மிக அருகில் அமர்ந்திருக்கிறார். மணமகன் கழுத்தில் பண மாலை இருப்பதும் வீடியோவில் தெரிகிறது. 

மணமகன் அருகில் உள்ள நண்பனுக்கு அந்த பண மாலையே குறியாக இருக்கிறது. பண மாலையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திருட அவர் பல முறை முயற்சிக்கிறார். இறுதியில் அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். மணமகனின் மிகவும் நெருங்கிய நண்பர் அவரது திருமணத்திலேயே அவரது பணத்தை திருடிய இந்த சம்பவம் கேமரா-வில் கைதாகியுள்ளது. 

இணையவாசிகளை அதிர்ச்சியடையச் செய்த அந்த வீடியோவை இங்கே காணலாம்:

திருமணத்தில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்

திருமணத்தில் மணமகனின் நண்பரே மணமகனின் பணத்தை திருடுவது எங்குமே நடக்காது. வினோத நிகழ்வின் இந்த வீடியோ meemlogyandghantaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. 'இப்போது இந்தப் பணத்தைக் கொண்டே சீர் செய்வாரா?’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘ நண்பன் கிட்டயே கைவரிசயா?’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்கள் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | இரு பாம்புகளுக்கு நடுவில் மாட்டிய மீன் பிழைத்ததா: வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News