இரண்டு நாள் முடக்கத்திற்கு பிறகு, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் ட்விட்டர் கடக்கு பயன்பாட்டிற்கு வந்தது!
பதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் ட்விட்டர் கணக்கு, கடந்த பிப்.,6 ஆம் தேதி மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.
அதே நாளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் அவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதேப்போல் பாலிவுட் நடிகர் அனுபம் கஹெர்-ன் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த ட்விட்டர் கணக்குகளை முடக்கியது, பாக்கிஸ்தானை சேர்ந்த ப்ரோ பாக்கிஸ்தான் குழு என கூறப்பட்டது.
இச்சம்பவங்களை குறித்முப், தனது ட்விட்டர் கணக்கினை மீட்டு தருமாறும் கிரண்பேடி புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீதான நடவடிக்கைகள் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று, தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததாக தனது ட்விட்டர் கணக்கின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
Friends, Am back after a fierce attack on my handle.
We are a universe of positive energy.
Let’s us continue to remain so.
Am grateful for early revival of my account. Thanks to effective interventions by my own social network team at @LGov_Puducherry & Twitter Leadership— Kiran Bedi (@thekiranbedi) February 8, 2018