வட இந்தியாவில் கலைகட்டும் தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து...!

வட இந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளித்திருநாளை முன்னிட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2018, 01:42 PM IST
வட இந்தியாவில் கலைகட்டும் தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து...!  title=

வட இந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளித்திருநாளை முன்னிட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து....! 

மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பானது தீபாவளி திருநாள்; இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாக, தீமை அகன்று நன்மைகள் பெருகும் நாளாக தீபாவளி விளங்குகிறது. இத்திருநாளை தெற்கு இந்தியாவில் இந்த வருடம் நவம்பர் 6 ஆம் தேதியும், வட இந்தியாவில் நவம்பர் 7 ஆம் தேதியும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகை கொட்டும் வட இந்திய மக்களுக்கு தேசிய மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தீபாவளி பண்டிகைக்காக, இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத் ஆகியோர் தனகளது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தீபாவளி பண்டிகைக்காக இந்திய பிரதமர் மோடி வதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த தீபாவளி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும். அனைவரது இல்லத்திலும் நல்ல மற்றும் பிரகாசத்தின் சக்தி எப்போதும் நிலவட்டும். அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, தீபாவளி பண்டிகைக்காக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எல்லா சக குடிமக்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான தீபாவளி வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள விளக்குகள் திருவிழா நம் நாட்டில் மற்றும் எங்கள் பகிரப்பட்ட கிரகத்தைச் சுற்றி இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டரில்;  அனைத்து இந்தியர்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள், தீபாவளி திருநாளில் எல்லா இல்லத்திலும் அமைதியையும் மகிழ்ச்சியையும் பொங்கட்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த தீபாவளி நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டமும், இருளை நீக்கி நல்ல ஒளியை நிலவி வெற்றியை தரட்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Trending News