எனக்கு பேரன் பிறந்துட்டான்; நான் பாட்டி ஆகிட்டேன் -ராதிகா!

ராதிகாவின் மகள் ரயானே மிதுனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!!

Last Updated : Jun 8, 2018, 07:12 PM IST
எனக்கு பேரன் பிறந்துட்டான்; நான் பாட்டி ஆகிட்டேன் -ராதிகா! title=

ராதிகாவின் மகள் ரயானே மிதுனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!!

நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா 1978-ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, பல படங்களில் நடித்து வெற்றி கண்டார். 80-களின் சிறந்த நாயகியாக பெயர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு தொலைக்காட்சியில் நுழைந்த அவர் இன்று வரை சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

அவரது மகள் ரேயான் ஹார்டிக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அம்மாவின் கல்யாணப் புடவையை மணமகள் ரேயான் அணிந்திருந்தது, அந்த சமயத்தில் பெரும் வைரல் ஆனது. இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ரேயானுக்கு தற்போது ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் ராதிகா. பாட்டியாகியிருக்கும் ராதிகாவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

 

Trending News