கார்த்திக் சுப்பராஜூக்கு ரஜினி போட்ட உத்தரவு!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. 

Last Updated : Mar 27, 2018, 02:31 PM IST
கார்த்திக் சுப்பராஜூக்கு ரஜினி போட்ட உத்தரவு! title=

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. 

இதையடுத்து, ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவிலேயே பிரமாண்டமாக உருவான எந்திரன் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிக்க உள்ளார். 

மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது நடித்து முடித்துள்ள ‘காலா’ படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாமல் இருந்து வருகிறது. அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘2.0’ படம் டிஜிட்டல், கிராபிக்ஸ் பணியால் தாமதமாகிவருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக சினிமா சம்பந்தப்பட்ட எவ்வித வேலைகளும் நடைபெறவில்லை.  இந்நிலையில் போராட்டம் முடிந்தவுடன் வெகு விரைவில் படப்பிடிப்பை துவங்க வேண்டும். ரஜினி, படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். எனவே, மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்மரமாக உள்ளனர் படக்குழுவினர்.

Trending News