சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் புதிய Update!

சீமராஜா திரைப்படத்தின் இசை மற்றும் டீஸர் வரும் ஜூலை 20-ஆம் நாள் மாலை 7 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Updated: Jul 18, 2018, 12:55 PM IST
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் புதிய Update!

சீமராஜா திரைப்படத்தின் இசை மற்றும் டீஸர் வரும் ஜூலை 20-ஆம் நாள் மாலை 7 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. 

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். 

இந்நிலையில் தற்போது சீமராஜா திரைப்படத்தின் இசை மற்றும் டீஸர் ஆனது வரும் ஜூலை 20-ஆம் நாள் மாலை 7 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.