சின்னஞ்சிறிய பறவைகளின் ரொமான்ஸ்... இணையவாசிகளை கிறங்க வைத்த காதல் வீடியோ!

பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2023, 04:38 PM IST
சின்னஞ்சிறிய பறவைகளின் ரொமான்ஸ்... இணையவாசிகளை கிறங்க வைத்த காதல் வீடியோ! title=

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவை நாம் அறியாத. நமக்கு தெரியாத விலங்குகளின் வாழ்க்கையையும், பறவைகளின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகில் பகிரப்படும் தகவல்கள் மூலம் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.

பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் பறவைகளின் காதலை விவரிக்கும் அழகான வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோவில், சின்னஞ்சிறிய பறவைகள் இரண்டு ரொமான்ஸ் காணலாம். அவை இரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, மன மகிழ்ச்சியுடன் மூக்கையும், உடலையும் உரசிக் கொண்டு காதலில் லயித்திருக்கின்றன. அவை செய்யும் உடல் அசைவுகள் அவர்களுக்கு இடையிலான காதலின் ஆழத்தை உணர்த்துறது. அழகான காதலை அவை வெளிப்படுத்தும் விதம் நம்மை ரசிக்க வைக்கிறது.

வைரலாகும் பறவை காதல் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

பறவையில் காதலை எடுத்துரைக்கும் இந்த பறவை வீடியோவைப் போல் மயிலின் காதல் உணர்வை விவரிக்கும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வைரலானது. உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கும். பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப்பெயர் பீபௌல் (Peafowl) என்பதாகும். ஆண் மயிலினை பீக்காக் (peacock) என்றும், பெண் மயிலினை பீஹென் (peahen) என்றும் அழைக்கிறோம். கீழே உள்ள இணைப்பில் அதன் வீடியோவை பார்த்து ரசிக்கலாம்

மேலும் படிக்க | Viral Video: ஆண் மயிலின் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!

மனதிற்கு இதமான பறவைகளின் விடியோக்களை போல விலங்குகளின் காதல் காட்சிகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் பறவைகளின் காதலை விவரிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. இணையத்தில் இதே போன்று அதிக அளவில் வனவிலங்கு வீடியோக்கள் பகிரபடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள். ஆன்னால், அன்றாட டென்ஷனை போக்கும் பறவைகள் வீடியோவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய நாய் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News