மீண்டும் களத்தில் ஸ்ரீரெட்டி... தற்போது சிக்கியது நம்ம விஷால்!

வாய்ப்பிற்காக தன்னை பலர் படுக்கைக்கு அழைத்ததாக சினிமா பிரபலங்கள் பலரை அலர வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது நடிகர் விஷால் பக்கம் திரும்பியுள்ளார்!

Last Updated : Jun 17, 2019, 03:43 PM IST
மீண்டும் களத்தில் ஸ்ரீரெட்டி... தற்போது சிக்கியது நம்ம விஷால்!

வாய்ப்பிற்காக தன்னை பலர் படுக்கைக்கு அழைத்ததாக சினிமா பிரபலங்கள் பலரை அலர வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது நடிகர் விஷால் பக்கம் திரும்பியுள்ளார்!

சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளிப்பதாகச் சொல்லி, தன்னை படுக்கைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என, தெலுங்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதெல்லாம் புகார் அளித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. 

தன்னுடைய குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியவர். இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட உலகம் பக்கம் திரும்பினார். 

இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் என பலர் எனக்கு வாய்ப்புத் தருவாதச் கூறி தன்னை படுக்கை அறைக்கு அழைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். 

இது பரபரப்பாக இருக்கும்போதே, நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டிக்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார். இதனையடுத்து ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் குடிபெயர்ந்தார்  ஸ்ரீரெட்டி, எனினும் இவருக்கு இதுவரை படவாய்ப்பு கிடைத்தாக தெரியவில்லை.

எனினும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சினிமா பிரபலங்களை வருத்தெடுத்து வருகின்றார். அந்த வகையில் அவர் தற்போது நடிகர் விஷாலை தனது முகப்புத்தகத்தின் வாயிலாக மிகவும் இழிவாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீரெட்டியின் பதிவுகள் மிகவும் இழிவாக இருப்பதால் அந்த கருத்துக்களை நீக்கி விட்டு, அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களை மட்டும் இங்கே அளிக்கின்றோம்... "விஷால் அவர்களே நீங்கள் எத்தனை பெண்களை ஏமாற்றி, சூறையாடி இருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்குத் தெரியும். அப்படி இல்லை என்றால், நீங்கள் அதை நிரூபிக்க முடியுமா? நான் சொல்லுவதை என்னால் நிரூபிக்க இயலும். 

விஷால் படங்களில் நடிக்க வேண்டும் என்றால், எந்தப் பெண்ணும் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும். இதை இன்றும் சொல்வேன்; என்றும் சொல்வேன். எங்கு வந்து வேண்டுமானும் சொல்வேன். என்னை அழித்தாலும் சரி... அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

உங்களிடம் படுக்கையை பகிர்ந்த பெண்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில்தான் உள்ளனர். உங்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கென்றே, ஒரு குரூப்பை நீங்கள் வைத்துள்ளதும் எனக்கு நன்கு தெரியும். அவர்கள் யார் யார் என்பதும் எனக்குத் தெரியும். இனியும், உங்கள் கோர முகத்தை நீங்கள் மறைத்து வைத்துக் கொண்டு, எல்லோரையும் ஏமாற்ற முடியாது" என ஸ்ரீ ரெட்டி தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார்.

More Stories

Trending News