பிரதமரை வரவேற்கும் தமிழகம் ஒரு பக்கம் #Gobackmodi மறுபக்கம் #TNWelcomesModi

எப்பொழுதெல்லாம் பிரமதர் மோடி தமிழகம் வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் இந்த இரண்டு ஹெஷ்டேக்கும் இந்தியா மற்றும் உலக அளவில் டிரெண்டிங் செய்வது வழக்கமாகி வருகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 30, 2019, 01:38 PM IST
பிரதமரை வரவேற்கும் தமிழகம் ஒரு பக்கம் #Gobackmodi மறுபக்கம் #TNWelcomesModi title=

சென்னை: இன்று தமிழகம் வருகை புரிந்துள்ள இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இரண்டு வகையான ஹெஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #Gobackmodi என்ற ஹெஷ்டேக்கும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக #TNWelcomesModi ஹெஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இது போல டிரெண்டிங் செய்து இது முதயல்ல. எப்பொழுதெல்லாம் பிரமதர் மோடி தமிழகம் வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் இந்த இரண்டு ஹெஷ்டேக்கும் இந்தியா மற்றும் உலக அளவில் டிரெண்டிங் செய்வது வழக்கமாகி வருகிறது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை புரியும்போதும் ஒவ்வொரு முறை அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல்கள் எழுவது தொடர்ந்து வருகிறது.

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் ஐஐடி வளாகம் சென்ற பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இரண்டாவது முறையாக மத்தியில் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி அவர்கள், முதல்முறையாக தமிழகம் வந்துள்ளார்.

சில #Gobackmodi பதிவு:-

 

 

 

 

 

 

 

 

சில #TNWelcomesModi பதிவு:-

 

 

 

 

 

 

 

 

 

Trending News