பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல்...

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Updated: Sep 18, 2019, 10:57 PM IST
பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல்...
Screengrab

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விஜய்யின் பிகில். வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து டைட்டில் சாங்கான வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போட்டு போட்டது.

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள உனக்காக பாடல் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்த பாடலினை விவேக் எழுத, ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மாதுரா தாரா தள்ளூரி பாடியுள்ளனர். 

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப்,  விவேக்,  பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.