வலிமை படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு; இணையத்தில் செம வைரல்

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 21, 2021, 02:21 PM IST
வலிமை படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு; இணையத்தில் செம வைரல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இந்நிலையில் வலிமை படத்தில் அஜிதுக்கு வில்லனாக நடிக்கும் கார்த்திகேயாவுக்கு இன்று பிறந்தநாள். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. தற்போது இவர் வலிமை படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திகேயாவுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் நடிகர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘வலிமை’ படக்குழு சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கார்த்திகேயாவின் வில்லன் தோற்றத்துடன் கூடிய இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

இதற்கிடையில் இந்த படம் ரிலீஸ் குறித்து வதந்திக்கள் அவ்வபோது பரவி வருகிறது. இருப்பினும் படக்குழுவினர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News