அரச நாகப்பாம்பின் வைரல் வீடியோ: தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆம், தற்போது தக்காளி விலை கிலோ 150 முதல் 250 ரூபாயை எட்டியுள்ளது. இந்த நிலையில், தக்காளியின் விலை வேகமாக உயர்ந்து வருவது குறித்து சமூக வலைதளங்களிலும் ஏராளமான மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் தக்காளி ட்ரெண்டிங் டாபிக்காக ஆகிவிட்டது. இதில் சிலர் 'அற்புதமான தக்காளி திட்டத்தை' கூட கொண்டு வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக "டெல்லியில் உள்ள கடைக்காரர் ஒருவர் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தக்காளியை இலவசமாக வழங்குவது" போன்றவை. இந்நிலையில், தற்போது தக்காளி மற்றும் நாகப்பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இணைய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கிளிப்பைப் பதிவிட்டவர், தக்காளியைக் காப்பது அரச நாகப்பாம்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
கடுப்பில் ஒரு நபர் மீது அட்டாக் செய்த நாகப்பாம்பு
இந்த அதிர்ச்சியூட்டும் கிளிப்பை வெளியிட்டு ஒரு நபர், தக்காளி ஒரு புதையலுக்குக் குறைவானது அல்ல, ஆபத்தான பாம்பு அதைப் பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வைரலாகி வரும் வீடியோவில், நாகப்பாம்பு தக்காளியின் நடுவில் அமர்ந்து வேடிக்கைப் பரப்புவதைக் காணலாம், அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அதைப் பிடிக்க முயன்ற போது, அந்த அரச நாகப்பாம்பு சீறிப்பாய்ந்து நபரைத தாக்கியது. வீடியோவில் நாகப்பாம்பின் உரத்த சப்தத்தை நீங்கள் கேட்கலாம். இதுவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | குப்பை எடுக்கும் பெண்ணுக்கு உதவிய நாய்: பார்த்து உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
தக்காளியை பாதுகாக்கும் அரச நாகப்பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:
பாம்பின் சத்தம் மக்களை பீதியடையச் செய்தது
இந்த அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனரான 'மிர்சா முகமது ஆரிப்' (mirzamdarif1) ஜூலை 11 ஆம் தேதி அன்று பதிவிட்டு இருந்தார். மிர்சா பாம்பு பிடிப்பவராக பணியாற்றுகிறார் மற்றும் விலங்கு மீட்பு சேவையை நடத்தி வருகிறார். அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் பாம்பு மீட்பு வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார. இந்த பதிவை போஸ்ட் செய்த சில மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 75 லைக்குகளையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடியோவை விரும்பி அதற்கு பலவித கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
பொதுவாக ராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | அட்ரா சக்க.. என்னமா நீச்சல் அடிக்குது இந்த குரங்கு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ