Viral Video: பாய்ந்து பிடித்த சிங்கம்; எகிறியடித்து ஓட விட்ட காட்டெருமை

பாய்ந்து வேட்டையாட வந்த சிங்கத்தை, எகிறியடித்து ஓட விட்ட காட்டெருமையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 25, 2022, 07:42 PM IST
  • சிங்கம் உதை வாங்கும் வீடியோ
  • எகிறியடித்த காட்டெருமை
  • நிலைகுலைந்து நின்ற சிங்கம்
Viral Video: பாய்ந்து பிடித்த சிங்கம்; எகிறியடித்து ஓட விட்ட காட்டெருமை title=

காட்டுக்கு ராஜா சிங்கம் என்றாலும், எல்லா நேரமும் அதற்கு வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்காது. ராஜதந்திரம் தவறும்போது கட்டாயம் அடி வாங்க வேண்டும். வலியவனாக கருதிக் கொண்டு தவறான நேரத்தில் வேட்டையாட சென்ற, எளியவனும் எட்டி உதைக்க தயங்க மாட்டான் என்பதற்கு உதாரணம் தான் இப்போது வைரலாகியிருக்கும் சிங்கம் - காடெருமை வீடியோ. இடம், பொருள், நேரம் அறியாது வேட்டையாட சென்ற சிங்கம், தரமாக உதை வாங்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால், போர் தந்திரம் ஜஸ்ட் மிஸ்ஸானதால், சிங்கத்திற்கு பாடி பஞ்சராகிவிட்டது.

மேலும் படிக்க | 'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். இரண்டு காட்டெருமைகள் நீர் நிலைகளுக்கு அருகே நின்று மேய்ச்சல் எடுத்துக் கொண்டிருக்கின்றன. அப்போது கொடும் பசியில் வரும் சிங்கம் ஒன்று, உணவை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக வேட்டையாட பயங்கர வேகத்தில் வருகிறது. சிங்கம் தாக்க வருவதை பார்த்தவுடன், காட்டெருமைகளும் பயந்துவிட்டன. அவை தப்பித்து ஓடுவதற்கான வழியையும் தேடத் தொடங்கிவிட்டன. அந்த நொடிப்பொழுதிற்குள் ஒரு காட்டெருமையின் குரல்வளையை சிங்கம் பிடித்து வேட்டையாட முற்படுகிறது.

அப்போது, அருகில் பயந்து ஓட தயாராக இருந்த மற்றொரு காட்டெருமை நொடியில் சிங்கத்திடம் சிக்கிய காட்டெருமையை மீட்க போர் வீரனாக மாறி, சிங்கத்தை எகிறி அடிக்கிறது. அந்த ஒரு அடியில் சிங்கம் நிலைகுலைந்து போகிறது. வேட்டைக்கு சிக்கிய காட்டெருமையும், சிங்கத்தை அடித்த காட்டெருமையும் அடி வாங்கிய சிங்கம் தெளிவதற்குள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு புயல்வேகத்தில் கிளம்பிவிட்டன. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

மேலும் படிக்க | நோயாளியாக வந்த பேய், அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News