தாயை பார்த்து "ஹாட்" என கூறிய சிறுவன் ! வைரல் வீடியோ!

தனது தாயின் புதிய ஹேர்கட்டை பார்த்து வியந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 03:07 PM IST
தாயை பார்த்து "ஹாட்" என கூறிய சிறுவன் ! வைரல் வீடியோ! title=

மழலையர்களின் குறும்புகள் எளிதில் அனைவரையும் ரசிக்க செய்துவிடும்.  தற்போது குழந்தைகள் செய்யும் வேடிக்கையான விஷயங்களை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.  அந்த வகையில் சிறுவன் ஒருவனின் அழகான செயல் வைரலாகி இணையத்தை வட்டமடித்து வருகின்றது.

ALSO | வைரலாகும் SpiceJet விமான பணிப்பெண்ணின் நடன வீடியோ!

பிரிட்டனி கென்ட் என்ற பெண் சலூனில் புது விதமான ஹேர்கட்டை ட்ரை செய்து வீட்டிற்கு வரும்போது அவரது மகனிடமிருந்தும், கணவரிடம் இருந்தும் சிறந்த கமெண்டை பெறுகிறார்.  மேலும் தன்னை பார்த்த பின் மகன் மற்றும் கணவரிடம் ஏற்படும் ரியாக்ஷனையும் பதிவு செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வைரல் வீடியோவில், பிரிட்டனி கென்ட் தனது முடியை அழகுபடுத்திக்கொண்டு, வீட்டிற்கு வருகிறார்.  கதவை திறந்து வீட்டிற்குள் நுழையும்போது, அவரது சிறிய மகன் தாயின் புதிய ஹேர்கட்டை பார்த்து விட்டு ஆச்சர்யத்தில் திகைக்கிறான், தனது தாயின் இந்த புதிய ட்ரான்ஸ்பர்மேஷனை கண்டு சந்தோஷத்தில் , “யூ எ ஹாட் மாமா (You a Hot mama) ” என்று கூறுகிறான்.  அந்த சிறுவன் மேலும் மேலும் உற்சாகத்தோடு தனது தாயை சுற்றிக்கொண்டே வருகிறான்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Britnee Kent (@britwkent)

அதனை தொடர்ந்து, பிரிட்டனியின் கணவரும் மனைவி பார்த்து திகைத்ததுடன், அவரும் "நீ அழகாக இருக்கிறாய்" என்று கூறினார்.  இவர்கள் இருவரின் கமெண்டும் பிரிட்டனிக்கு மகிழ்ச்சியை அளித்தது.  தற்போது சிறுவன் தன் தாயை "ஹாட்" என்று கூறும் இந்த வீடியோ 7 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

ALSO | மணமக்களை அதிரவைத்த பிராங்க்! இணையவாசிகளை கவர்ந்த வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News