மணமக்களை அதிரவைத்த பிராங்க்! இணையவாசிகளை கவர்ந்த வீடியோ!

புது மணமக்களை ஹோட்டல் ஊழியர்கள் பிராங்க் செய்து அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 8, 2021, 09:29 PM IST
மணமக்களை அதிரவைத்த பிராங்க்! இணையவாசிகளை கவர்ந்த வீடியோ!

தற்போது அதிகளவில் திருமண விழாவில் நடக்கும் நிகழ்வுகள் தான் அதிகம் வைரலாகி வருகிறது.  அது விழாவில் பங்குபெறுபவர்களை மட்டுமல்லாது, பார்ப்பவர்களையும் ரசிக்க செய்கிறது.  அந்த வகையில் மணமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஹோட்டல் ஊழியர்கள் இருவர் செய்த செயல் ஒன்று தீயை பரவி வருகிறது.

அந்த வீடியோவில், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் குழுமியிருக்கும் அந்த திருமண விழா அறையினுள், மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் அவர்களுக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்யேகமான ஆடைகளை அணிந்துகொண்டு உற்சாகமாய் வந்து கொண்டிருந்தனர்.

ALSO READ | Viral Video: ‘நாங்களும் ஜிம்முக்கு போவோம்ல’... அசத்தும் பூனைக் குட்டி..!!

அப்போது அவர்களுக்கென்று செய்யப்பட்ட பெரிய கேக்கை அந்த விழா நடக்கும் ஹோட்டலின் ஊழியர்கள் இருவர் அந்த கேக்கை கொண்டு வருவதை மணமக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக ஊழியர்களில் ஒருவரின் கை நழுவி அந்த கேக் கீழே விழுந்துவிடுகிறது.

 

இதனை கண்ட மணமக்கள் எதுவும் கூற இயலாது, அதிர்ந்து போயினர், அவர்களது ரியாக்க்ஷன் அந்த வீடியோவில் நன்கு பதிவாகி உள்ளது.  சிறிது நேரத்தில் அவர்களை மீண்டும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக, அதே போல மற்றொரு கேக்கை இன்னொரு கொண்டு வருகிறார்.  அப்போது தான் அவர்களுக்கு உண்மை தெரிய வருகிறது, ஏற்கனவே கீழே விழுந்தது போலியான கேக் என்றும், ஹோட்டல் ஊழியர்கள் தங்களை பிராங்க் செய்வதற்காக தான் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.  

அதனை தொடர்ந்து மணமக்கள் பழைய உற்சாகத்தோடு, அந்த கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு, நடமாடி தங்கள் திருமண விழாவை கொண்டாடினர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ | Viral Video: நெடுஞ்சாலையை கடக்கும் ராட்சஸ அனகோண்டா பாம்பு..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News