இன்றைய வைரல் வீடியோ: வித்தியாசமான உணவு மற்றும் பானங்களின் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் வேர்க்கடலை மற்றும் ஐஸ் உடன் சீஸ் சோடாவை உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வித்தியாசமான உணவுப் பரிசோதனை வீடியோக்களை நாம் கண்டு வருகிறோம். அதன்படி தற்போது குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் வேர்க்கடலையில் சீஸ் பர்ஸ்ட் சோடாவை போட்டு ஒரு புதிய பானத்தை தயாரித்துள்ளார். வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் ஐஸ் மற்றும் வேர்க்கடலையை நிரப்பினார். பின்னர் அதில், சோடாவைச் சேர்க்கிறார். இறுதியாக, அந்த நபர் துருவிய சீஸ் சேர்த்து பானத்தை பரிமாறினார்.
வேர்க்கடலையுடன் சீஸ் பிளாஸ்ட் சோடா பானத்தை தயாரிக்கும் வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:
குஜராத்தின் சூரத்தில் தெரு உணவு வியாபாரி ஒருவர் சீஸ் பிளாஸ்ட் சோடா தயாரிப்பதை வீடியோ காட்டுகிறது. முதலில் விற்பனையாளர் கண்ணாடியில் ஐஸ் மற்றும் வேர்க்கடலையை வைத்து, பின்னர் அதில் நீலம் மற்றும் மஞ்சள் நிற சோடாவை கலக்கிறார். வீடியோவின் முடிவில் அவர் பானத்தில் சீஸ் சேர்க்கிறார். சூரத் சீஸ் பிளாஸ்ட் சோடா..சீஸ் பிளாஸ்ட் சோடாவை ஒரு முறையாவது குடித்திருக்கிறீர்களா..?
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதில் இருந்து, 5.8 லட்சம் பேர் பார்த்துள்ளனர் மற்றும் ஏராளமான நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சோடா மற்றும் சீஸ் முற்றிலும் மாறுபட்ட சுவைகளைக் கொண்டிருப்பதாக பல நெட்டிசன்கள் கோபமடைந்தனர். மற்றொரு பயனர் என்ன கருமம் டா இது என்று பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: சீனாவின் ‘புழுக்கள்’ மழை பெய்ததா... உண்மை நிலை என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ