Video: புத்தம் புதிய ராயல் என்பீல்ட் புல்லட் வெடித்து சிதறிய பயங்கரம்

ஆந்திராவில், புத்தம் புது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது புதிய புல்லட்டுடன் கோவிலுக்கு  சென்று வாகன் பூஜை போட சென்றிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2022, 04:49 PM IST
  • புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் தீப்பிடித்தது.
  • தீ பற்றிய நிலையில் புல்லட் வெடித்தது.
  • சமீபத்தில் மின்சார ஸ்கூட்டர் எரிந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.
Video: புத்தம் புதிய ராயல் என்பீல்ட் புல்லட் வெடித்து சிதறிய பயங்கரம்  title=

கடந்த சில நாட்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால்  ஆந்திராவில் புல்லட் ஒன்று வெடித்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில்  அதிகம் இல்லை, ஆனால் ராயல் என்ஃபீல்டு சாலைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில், புத்தம் புது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது புதிய புல்லட்டுடன் கோவிலுக்கு  சென்று வாகன் பூஜை போட சென்றிருந்தார். அப்போது  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். முதலில் பைக் தீப்பிடித்தது நிலையில் பின்னர், நடுரோட்டில் வெடிகுண்டு போல் வெடித்தது.

பூஜைக்கு தயார் செய்யும் போது ஏற்பட்டதீ விபத்து

ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் தீப்பிடித்த சம்பவம் ஆந்திர பிரதேசம் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு வசிக்கும் ரவிச்சந்திரா, தனது புதிய புல்லட்டிற்கு வாகன பூஜை செய்வதற்காக அனந்தபூரில் உள்ள புகழ்பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். இங்கு சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பூஜைக்கு ஏற்பட்டு செய்ய சென்றார். சிறிது நேரத்தில் பைக்கில் இருந்து புகை வெளியேறி திடீரென பைக்கில் தீப்பிடித்தது. பின் பைக் வெடிகுண்டு போல் வெடித்து, தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் பீதியடைந்தனர். இதனால் வாகன நிறுத்துமிடத்தில் புல்லட்டை சுற்றி நிறுத்தியிருந்த பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தது.

மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ

ராயல் என்ஃபீல்டு புல்லட் தவிர, கடந்த சில நாட்களில் மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. முதலில், புனேயில் ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பிறகு தமிழகத்தின் வேலூரில் வீட்டில் சார்ஜ் செய்து கொண்டிருந்த ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஆண் ஒருவரும் அவரது மகளும் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். 

இதற்குப் பிறகு, Pure EV-யின் மின்சார ஸ்கூட்டர் சம்பவமும் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் இந்த விசாரணை டிஆர்டிஓவின் தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News