இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் சுவாரஸ்யமான வனவிலங்கு வீடியோக்களைப் பகிர்வதற்காக பிரபலமானவர். திங்களன்று வெளியிடப்பட்ட வீடியோவில், சிறுத்தை காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதைக் காணலாம். வீடியோவின் இடம் தெரியவில்லை என்றாலும், காட்டுப் பூனை சாலையில் பன்றிகளை வேட்டையாடுவதைக் காட்டுகிறது. அதே நேரத்தில் பல்வேறு எஸ்யூவி வாகனங்களும் காணப்படுகின்றன. சிறுத்தை பாய்ந்து காட்டுப்பன்றியை அதன் வாயில் பிடித்து சென்ற நிலையில், காட்டுப் பன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. ஆனால் சாலையில் மற்றொரு காட்டுப் பன்றியைப் பார்த்த சிறுத்தை, அதை வேகமாக வாயில் இருந்து கீழே விட்டு மற்றொன்றைத் தேடி ஓடுகிறது. ஆனால் அந்த காட்டுப்பன்றி சிறுத்தையை மிஞ்சிய வேகத்தில் ஓடி, சிறுத்தையிடம் இருந்து தப்பித்து விட்டது.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது என பெரியவர்கள் கூறுவார்கள். கையில் இருப்பதை விட்டு விட்டு பேராசையினால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது சிறுத்தை.
சிறுத்தை காட்டு பன்றி வீடியோவை கீழே காணலாம்:
This leopard forgot the golden principle-a bird in the hand is worth two in the bush pic.twitter.com/KwQUKlRzia
— Susanta Nanda (@susantananda3) July 3, 2023
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இணைய உலகில் பகிரப்படும் தகவல்கள் மூலம் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
சில நாட்களுக்கு முன் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த வீடியோவில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடும் கழுகு, தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக வலுமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ