எருமை மாட்டிடம் எகத்தாளம் பண்ணி நபருக்கு நேர்ந்த கதிய நீங்களே பாருங்க..! வீடியோ

வீரத்தை காண்பிப்பதாக நினைத்து கடுப்பேற்றிய நபரை தூக்கி பந்தாடியிருக்கிறது எருமை மாடு. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2023, 10:37 AM IST
எருமை மாட்டிடம் எகத்தாளம் பண்ணி நபருக்கு நேர்ந்த கதிய நீங்களே பாருங்க..! வீடியோ title=

எருமை மாட்டிடம் வீரத்தை காட்டினால், அது சும்மா விடுமா என்ன?. சில நபர்களுக்கு விலங்குகளிடம் மோதி பார்ப்பது என்பதை விரம்னு நினைத்துக் கொண்டு செய்யும் செயல்கள் அவர்களுக்கே பாதகமாக போய்விடுகிறது. ஊர் மக்கள் முன்னிலை செய்யும் இதுபோன்ற செயல்களுக்கு வீர சாகசக்காரன் என்ற பட்டம் கொடுப்பார்கள் என்பதால், ஹீரோயிசத்துக்கு ஆசைப்பட்டு உதை வாங்கிக் கொண்டு இருப்பார்கள். அப்படியான வீடியோ ஒன்று இப்போது டிவிட்டரில் வைரலாகியிருக்கிறது. ஊர் குழுமியிருக்க, ஒரு எருமை மாட்டை நடுவே நிற்க வைத்து அதன் கொம்பில் தீயை பற்ற வைத்து இருக்கிறார்கள். ஏதோ சம்பிரதாய விளையாட்டு போல் தெரிகிறது. 

மேலும் படிக்க | சீண்டிய நபரை அடாக் செய்த குரங்கு, நொந்துபோன நபர், வைரல் வீடியோ

ஊர் மக்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு நபர் மட்டும் கொம்பில் தீ எரிந்து கொண்டிருக்கும் எருமை மாடு முன்பு நின்று கொண்டு என்னிடம் வந்து மோதிப்பார் என்கிற ரீதியில் ஆட்டம் போடுகிறார். அதுவே கொம்பில் தீ வைத்துவிட்டால் செம கடுப்பில் இருக்கிறது. அந்த எருமை மாட்டிடம் சென்று வேண்டாத வீராப்பு வேறு அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு என்ன? எருமை மாடு அவரை சும்மா விடுமா?. அந்த நபர் சுதாரிப்பதற்குள் ஜெட் வேகத்தில் ஓடிச் சென்று தூக்கி பறக்க விடுகிறது.

ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அந்த நபருக்கு என்ன நடந்து என்றே தெரியவில்லை. நொடிப்பொழுதில் சீறிப்பாய்ந்து சென்று அந்த நபரை தாக்கிவிடுகிறது. அந்தரத்தில் கீழே பறந்து சென்று கீழே விழும் நபர் நிலைகுலைந்து கிடக்கிறார். உடனே இன்னொருவர் ஓடிவந்து எருமை மாடு திரும்பி வருவதற்குள் அந்த நபரை காப்பாற்றி தூக்கி செல்கிறார். இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 9 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது.

மேலும் படிக்க | மான்கள் சாப்பிட குரங்கு என்ன செஞ்சுது பாருங்க: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News