வைரல் வீடியோ: இலங்கைப் பாடகி யோகானி திலோகா டி சில்வா பாடிய "மணிகே மகே ஹிதே" என்ற இனிய பாடல் இன்னும் இணையத்தில் ஆட்சி செய்து வருகிறது. இந்த பாடல் இலங்கை மற்றும் இந்தியாவில் தொடர்ந்து அலைகளை உருவாக்கி வருகிறது. பல பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெறுகின்றன.
தற்போது "மணிகே மகே ஹிதே" என்ற பாடலுக்கு ஒரு பெண் பிஹு நடனம் ஆடும் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் புயலைக்கிளப்பி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த பலர் பாராட்டி வருகின்றனர்.
29.9K பாலோர்ஸ் கொண்ட படைப்பாளியான பாக்கி ராய் என்ற பெண்மணி, அந்த பாடலுக்கு ஏற்பட சரியான அசைவுகளுடன் பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த வீடியோவில் அந்த பெண் மஞ்சள் புடவை அணிந்து பிஹு டான்ஸ் செய்வதைக் காணலாம். இது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களின் நாட்டுப்புற நடனமாகும்.
இந்த வீடியோ வைரலாகியுள்ளது மற்றும் நெட்டிசன்கள் அவரது நடனத்தையும் புன்னகையையும் பார்த்து மெய்மறந்து பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர், "மிக அருமையானது" என்று கூறியுள்ளார். மற்றொருவர் "மிகவும் அருமை" என்று கருத்துரைத்தார்.
ALSO READ | இப்படி எல்லாம் மணமகனை வரவேற்கலாமா? Viral Video
வைரலான சிங்களப் பாடல் பல உள்ளடக்கப் படைப்பாளர்களை உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸைச் சேர்ந்த ஒரு விமான பணிப்பெண் "மணிகே மகே ஹிதே" பாடலுக்கு விமான சீருடை மற்றும் பாதுகாப்பு அங்கியை அணிந்து நடனமாடிய வீடியோ பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டு, இன்ஸ்டாகிராமில் 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது மற்றும் ஆன்லைனில் மிகவும் வைரலானது.
முன்னதாக, அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பரிணீதி சோப்ரா, டைகர் ஷெராஃப், ரன்விஜய் சிங்கா, நேஹா கக்கர் மற்றும் யஷ்ராஜ் முகதே போன்ற பல பிரபலங்கள் அவர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோக்களைப் பகிர்ந்தனர்.
ALSO READ | Viral Video: போலீசுக்கு போன் செய்த 4 வயது குழந்தை.. அதிர்ச்சியளிக்கும் காரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR