பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘India's Most Wanted’ திரைப்பட trailer!

பாலிவுட் நடிகர்  அர்ஜூன் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘India's Most Wanted’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

Updated: May 2, 2019, 06:28 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘India's Most Wanted’ திரைப்பட trailer!
Screengrab

பாலிவுட் நடிகர்  அர்ஜூன் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘India's Most Wanted’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

'No One Killed Jessica' திரைப்பட புகழ் இயக்குநர் ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் நடிக்கும் திரைப்படம் India's Most Wanted. நாட்டிற்கு குந்தகம் விலைவிக்கும் வகையில் பயங்கராவாத செயல்களில் ஈடுப்படும் தீவிரவாதிகளை பிடிக்கும் குழுவிற்கு தலைமை தாங்குபவராக கபூர் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவ்விக்கின்றது.

சமீபத்தில் பல இடங்களில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது பயங்கரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட் சாக்லேட் பாய் அர்ஜூன் கபூரை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய அவதாரத்தில் திரைப்படத்தின் இயக்குநர் இத்திரைப்படத்தில் காண்பித்துள்ளார். வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை தேடி செல்லும் நாயகனின் கதையை சற்று விருவிருப்பாக தெரிவித்திருக்கும் படத்தின் இயக்குநர்., பார்வையாளர்களை நாற்காலியின் முனையில் அமர வைக்க முற்பட்டுள்ளார்.

Fox Star Studios நிறுவனத்துடன் படத்தின் இயக்குநர் இத்திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். வரும் மே 24, 2019-ஆம் நாள் இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திரைப்படத்தின் மூத்த நடிகர் ராஜேஷ் சர்மா முக்கி வேடம் ஏற்று நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.