‘ஒரசாத’ புகழ் மெர்வின்-விவேக் இசையில் வெளியானது Chill_Bro!

'பட்டாஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில் ப்ரோ’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Dec 1, 2019, 08:45 PM IST
‘ஒரசாத’ புகழ் மெர்வின்-விவேக் இசையில் வெளியானது Chill_Bro!

'பட்டாஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில் ப்ரோ’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘பட்டாஸ்’. கடந்த மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்பு பணி துவங்கியது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜூலை மாதத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டிருந்த படக்குழு தற்போது படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். சில் ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். பாடல் வரிகளை மெர்வின் சாலமன், விவேக் சிவா இணைந்து எழுதியுள்ளனர். 

விவேக் - மெர்வின் இணை குறித்து பேசுகையில்., சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான ‘ஒரசாத’ என்ற ஒற்றைப்பாடல் மூலம் கேட்பவர்களின் உள்ளங்களையும் உயிரையும் உரசிப்போனவர்கள்.

பெரிய விளம்பரங்கள் இல்லாமல் கடைக்கோடி கிராமங்கள் வரை இணையம் மூலம் சென்றடைந்த இவர்களது ஒரசாத பாடல் கடந்த 2018-ஆம் ஆண்டில் பெரும் பொருட்செலவில் உருவான திரைப்பட பாடல்களுக்கெல்லாம் சாவல் விட்டது.

திரையிசையில் குலேபகாவலி திரைப்படத்தில் இவர்கள் இசைத்த ‘குலேபா’ இல்லாத கல்லூரி இசை நிகழ்ச்சிகளை இப்போது பார்க்க இயலாது. அந்த அளவிற்கு இளைஞர்களில் நாடி துடிப்பை உணர்ந்து இசை அமைத்த இந்த ஜோடியின் அடுத்த படைப்பு விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.