உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் மிக முக்கியமாக இருப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவு வகைகளிலும் தென்னிந்திய உணவு வகைகளான குழம்பில் இருந்து ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி இல்லையென்றால் சமையலே இல்லை எனும் அளவிற்கு தக்காளி உள்ளது. அப்படிபட்ட தக்காளியின் விலை தற்போது திடீர் என்று கிடு கிடுவென உயர்ந்து கிலோ 120 வரை ஆகி பொதுமக்களை திணற வைத்துள்ளது.
அதன்படி கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் தொடர் மழை காரணத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதுவே தக்காளி விலை உயர்வுக்கு காரணமாகும். இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தக்காளி விலை உச்சத்திற்கு சென்றதால் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு!
இந்நிலையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்துள்ள பெருமாகவுண்டம்பட்டி இளம்பிள்ளை, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில் புதுரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தக்காளி பெட்டியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகிலுள்ள உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து தக்காளியை பறிகொடுத்தவர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததை அடுத்து தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ தக்காளி விலை ரூ.120-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.80 வரை கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் படிக்க | அடேங்கப்பா, விண்ணை முட்டும் தக்காளி விலை; ரூ.120 க்கு விற்பனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR