அடுத்த வாரம் நடைபெறுகிறது கிழக்காசிய நாடுகளில் உச்சிமாநாடு!

கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தொன்கொரியா நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு வரும் மே 9-ஆம் நாள் நடைபெறவுள்ளது!

Last Updated : May 2, 2018, 07:16 AM IST
அடுத்த வாரம் நடைபெறுகிறது கிழக்காசிய நாடுகளில் உச்சிமாநாடு!

கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தொன்கொரியா நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு வரும் மே 9-ஆம் நாள் நடைபெறவுள்ளது!

கிழக்காசிய கண்ட நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும், நட்புறவை பலப்படுத்தி கொள்ளவும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன. 

அந்த வகையில் இந்த ஆண்டின் உச்சி மாநாட்டினை வரும் மே 9-ஆம் நாள் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டின் முதல் மாநாடானது 2008-ம் ஆண்டு ஜப்பானில் நடைப்பெற்றது. அதன்பிறகு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் இந்த மாநாடு ஜப்பானில் நான்காவது முறையாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 8-ஆம் தேதி ஜப்பானுக்கு செல்லமெ சீன பிரதமர் லி கெகியாங் வரும் 11-ஆம் தேதி வரை ஜப்பானில் தங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மன்னர், அதிபர், பிரதமர் ஆகியோரை சந்திக்கும் அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது!

More Stories

Trending News