மிதுன ராசியில் செவ்வாய் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்

Mars Transit 2024: ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு தாவப் போகிறார். இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 21, 2024, 05:16 PM IST
  • உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு.
  • திருமண வாழ்க்கையில் உறவு நெருக்கத்தை அதிகரிக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசியில் செவ்வாய் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம் title=

Mars Transit 2024 in Gemini Zodiac Sign: ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு தீய பலனையும் தரக்கக்கூடும். அந்த வகையில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். செவ்வாய் கிரகத்தின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். ஆனால் இந்த ராசி மாற்றம் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்கள் செல்வ செழிப்பையும், சொத்துக்களை பெறலாம். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

கடகம் (Cancer Zodiac Sign): மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit 2024) கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். தொழிலதி செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்யும் தொழிலின் மூலம் பல இடங்களில் இருந்து பாராட்டப்படுகளைப் பெறுவீர்கள். மேலும் சமூகத்தில் உங்களின் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முழு ஆற்றாலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும்.

மேலும் படிக்க | Jupiter Retrograd Transit: குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்

சிம்மம் (Leo Zodiac Sign): மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும் பலன்களை மட்டுமே தரும். பணம் வரவு உங்களைத் தானாகவே தேடி வரும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்பட்டு சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் கைப்பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிறைந்திருக்கும். வணிகஸ்தர்கள் நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும். ஒவ்வொரு வேலையிலும் உற்சாகமாக பங்கேற்று செய்து முடிப்பீர்கள்.

மகரம் (Capricorn Zodiac Sign): மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் நேர்மறை ஆற்றலுடன் இருப்பீர்கள். முழுமையான கவனத்தை வேலையில் செலுத்தவும். நம்பிக்கை அதிகரிக்கும். மத நிகழ்வுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் மற்றும் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை செய்துக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையில், உங்கள் துணையுடன் ஆன உறவு நெருக்கத்தை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Lord Saturn: சனி பகவான் துணை இருப்பார்... கவலை வேண்டாம் மேஷ ராசியினரே..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News