பங்குனி அமாவாசை: இதை செய்தால் எல்லா பிரச்சனைகளும் நீங்கும்..! சைத்ரா அமாசவாசை பலன்கள்

பங்குனி அமாவாசை 2023: மார்ச் 21 ஆம் தேதி வரும் அமாசவாசை பங்குனி அமாவாசை மற்றும் சைத்ர அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தில் வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வழிபாட்டை செய்தால் அவர்களுக்கான எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2023, 04:46 PM IST
பங்குனி அமாவாசை: இதை செய்தால் எல்லா பிரச்சனைகளும் நீங்கும்..! சைத்ரா அமாசவாசை பலன்கள்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் சைத்ர அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது பூதாதி அல்லது பூமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் கங்கை அல்லது மற்ற புண்ணிய நதிகளில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்நாளில் அன்னதானம் செய்வதும் மிகவும் முக்கியமானது. இதைச் செய்வதன் மூலம், தொழிலில் முன்னேற்றம் மற்றும் வேலையில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இம்முறை சைத்ர அமாவாசை மார்ச் 21 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் 4 முறைகளை எடுத்துக்கொள்வது வாழ்வில் செழிப்பையும், குடும்பத்தில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தையும் அதிகரிக்கும். அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

குழந்தை பாக்கியம்

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறுக்காக ஏங்குபவர்கள், பங்குனி அமாவாசை அல்லது சைத்ர அமாவாசை தினத்தில் அரச மரத்தின் வேருக்கு தண்ணீர், கருப்பட்டி, பால், பார்லி ஆகியவற்றைக் கலந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, அவர்கள் அரச மரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும். மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதைச் செய்வதன் மூலம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க | குரு - ராகு ஏற்படுத்தும் சண்டால் யோகம்! 4 ராசிகளுக்கு எச்சரிக்கை - மீள வழி..!

மங்கள தோஷம் நீங்கும்

நீங்கள் மங்கள தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், பௌமாவதி அமாவாசை அன்று மங்கள மந்திரத்தை 'ஓம் க்ரான் க்ரௌன் சஹ பௌமாய நம' என்று 108 முறை உச்சரிக்கவும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள், வெல்லம், நெய், செம்பருப்பு, குங்குமம், பவளம், தங்கம், செம்புப் பாத்திரங்கள், சிவப்பு நிற ஆடைகள் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்குங்கள். இந்த பரிகாரத்தை செய்வதால், வாழ்க்கையில் மங்கள தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேலை-வியாபார முன்னேற்றம்

நிறைய முயற்சிகள் செய்தாலும் வேலை-வியாபாரத்தில் சரியான முன்னேற்றம் கிடைக்காதவர்கள், சைத்ர அமாவாசை (2023) அன்றும் நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக, சைத்ர அமாவாசை நாளில், ஹனுமானுக்கு புதிய சிவப்பு நிற அங்கியை அணிவித்து, ராம ரக்ஷா சூத்திரத்தை ஓத வேண்டும். இந்த நாளில் அரிசி, பால் மற்றும் வஸ்திர தானம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இந்த பரிகாரத்தால் முன்னோர்களின் அதிருப்தி நீங்கி தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

பித்ரா தோஷத்திலிருந்து விடுதலை

பித்ரா தோஷம் உள்ளவர்கள், சைத்ர அமாவாசை (2023) அன்று தங்கள் முன்னோர்களை வணங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இந்த நாளில் கறுப்பு எள்ளை தானம் செய்வதால் சனி பகவான் மகிழ்வதாகவும், பித்ரா தோஷம் நீங்குவதாகவும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குடும்பத்தில் பாசிட்டிவ் எனர்ஜி ஓட்டம் அதிகரித்து பொருளாதார பலம் வரும்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி 2023: மற்றவர்களுக்கு சோகம் - இந்த 4 ராசிகளுக்கு மட்டும் யோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News