தீபாவளி 2023: உங்களை குபேரனாக்கும் லட்சுமி குபேர பூஜையை செய்யும் முறை!

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க தீபாவளியன்று கணபதியுடன் லட்சுமி தேவியை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அன்னை லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற, லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பான பலனைத் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 11, 2023, 06:55 PM IST
  • இருளை அகற்றி ஒளியை பரவச் செய்யும் தீபாவளி பண்டிகை.
  • தீபாவளி அன்று செய்யும் லட்சுமி குபேரன் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
  • வாழ்க்கையில், அதிசயமான பலன்களை நீங்களே காணத் தொடங்குவீர்கள்.
தீபாவளி 2023: உங்களை குபேரனாக்கும் லட்சுமி குபேர பூஜையை செய்யும் முறை! title=

இன்றைய காலக்கட்டத்தில், தன் பணப்பெட்டியில் பணம் எப்போதும் நிரம்பியிருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன... பணத்துக்குப் பஞ்சம் வரக்கூடாது என்று தான் அனைவரும் நினைப்பார்கள். ஏனென்றால், பணம் இல்லாவிடில் வாழ்க்கையின் சாதாரண தேவைகளை கூட நிறைவேற்றுவது கடினம் என்ற நிலை ஏற்படலாம். வீட்டில் செல்வம் நிலைத்திருக்க தீபாவளியன்று கணபதியுடன் லட்சுமி தேவியை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இருளை அகற்றி ஒளியை பரவச் செய்யும் தீபாவளி பண்டிகை அன்று, அன்னை லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற, லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பான பலனைத் தரும். வாழ்க்கையில், அதிசயமான பலன்களை நீங்களே காணத் தொடங்குவீர்கள்.

லட்சுமி குபேர பூஜை முக்கியத்துவம்

ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில், மாலை நேரத்தில் மகாலட்சுமியை பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என சிவபெருமான் குபேரனுக்கு கூறிய அறிவுரையின் பேரில் குபேரன் லட்சுமியை வணங்கி செல்வங்களை பெற்றார். அந்த நாள்தான் தீபாவளித் திருநாளாக கொண்டாடப்படுகின்றது.  எனவே, தீபாவளி அன்று செய்யும் லட்சுமி குபேரன் பூஜை மிகவும் சிறப்புவாய்ந்தது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்ற போது லட்சுமி தேவியை வணங்கி குபேர எந்திரத்தைப்  பெற்றார். எனவே தீபாவளி திருநாளில், நாமும் செல்வத்தின் அட்சய பாத்திரமாக விளங்கும் குபேரரையும், அந்த செல்வத்தை அவருக்கு அளித்த மகாலட்சுமியையும் வணங்கி இந்த பூஜையை செய்தால், வீட்டில் செல்வம் பெருகும், கடன்கள்  தீரும் என ஐதீகம்.

லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை

லட்சுமி குபேர பூஜை செய்யும்போது, லட்சுமி குபேரரின் படத்தை எடுத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜைக்கான இடத்தில் வைக்கவும். கலசம் கொண்டு பூஜை செய்பவர்கள், கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதில் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றி மாவிலை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும். பல வகையான மணம் வீசும் மலர்கள், அட்சதை, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். லட்சுமி குபேர ஸ்தோத்திரங்கள், மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசுக்தம் ஆகியவற்றை பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின்னர், பாயசம், வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்டி நம்ஸ்கரிக்க வேண்டும். 

மேலும் படிக்க | பணத்திற்கு பஞ்சமே இருக்காது... இந்த ‘6’ அதிசய செடிகள் இருந்தால் போதும்..!

லட்சுமி தேவியை மகிழ்விக்கும் பிற வழிகள்

1. தீபாவளி நாளில் அசோக மரத்தின் வேரை வழிபட வேண்டும், அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

2. தீபாவளி நாளில் விநாயகர், அன்னை மகாலட்சுமி இருவரையும் சேர்த்து வணங்கிட வீட்டில் உள்ள வறுமை நீங்கி லட்சுமி தேவி வீட்டில் நிரந்திரமாக வாசம் செய்வாள்

3. தீபாவளியன்று மார்க்கெட்டில் புதிய துடைப்பம் வாங்கி, பூஜைக்கு முன் அதைக் கொண்டு பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து யாரும் பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும். மறுநாள் முதல் வீட்டை சுத்தம் செய்ய இதையே பயன்படுத்துங்கள், இதனால் வறுமை நீங்கும், லட்சுமி தேவி வீட்டை விட்டு நீங்காமல் இருப்பாள்.

4. தீபாவளியன்று, வீட்டின் பிரதான நுழைவாயிலை புதிய மலர்களால் அலங்கரிப்பதோடு, உங்கள் குடும்ப முன்னோர்களின் படங்களுக்கும் மாலை அணிவிக்கவும்.

5. தீபாவளி நாளில் உங்கள் முன்னோர்களின் நினைவாக 11 பேருக்கு அன்னதானம் வழங்கினால் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இதைச் செய்வதில் சிரமம் இருந்தால், குறைந்தது ஒரு ஏழைக்கு மட்டுமாவது வயிறார உணவை கொடுங்கள்.

6. தீபாவளி தினத்தன்று ஸ்ரீ ஹனுமானை வணங்கி பூஜிப்பதன் மூலம் குடும்பத்தில் செழிப்பு மற்றும் புகழ் மற்றும் செல்வம் பெருகும்.

மேலும் படிக்க | தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை கட்டுப்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News